மேலும் அறிய

Trump Vs Pezeshkian: “உங்க அழுத்தத்துக்கு பயந்தெல்லாம் பேச முடியாது“; ட்ரம்ப்புக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரான் அதிபர்

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து, திணிக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அவர் என்னென்ன கூறியுள்ளா.? பார்க்கலாம்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பயந்து, தங்கள் மேல் திணிக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தோல்வியில் முடிந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகள் போர் தொடுத்தன. இதைத் தொடர்ந்து, ஈரானும் அதற்கு பதிலடி கொடுத்தது. அதோடு, ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை திறக்குமாறு கூறி, ஈரானுக்கு பல்வேறு மிரட்டல்களை ட்ரம்ப் விடுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன், ஈரானுடன் போர் நிறுத்தத்தை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியில், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முதல் கட்டமாக, கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அந்த பேச்சுவாத்தை தோல்வியடைந்த நிலையில், கடந்த புதன் கிழமை ட்ரம்ப் அறிவித்த 2 வார போர்நிறுத்தம் முடிவுக்கு வர இருந்தது.

ஆனால், எதிர்பாராத விதமாக, திடீரென காலவரையின்றி போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதாக ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.

2-ம் கட்ட பேச்சுவாத்தை ரத்து

இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமையன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதற்காக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் சென்றனர்.

அதேபோல், அமெரிக்கா சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவினர் பாகிஸ்தான் வர இருந்தனர். ஆனால், அந்த பயணத்தை திடீரென ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல் போனது.

ஈரான் அதிபர் பதிலடி

இந்த நிலையில், அமெரிக்கா தனது அழுத்தம் கொடுக்கும் கொள்கைகளையும், பிராந்தியத்தில் அதன் ராணுவ இருப்பையும் தொடர்ந்தால், திணிக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பதிலடி கொடுத்துள்ளதாக, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

2-ம் கட்ட பேச்சுவார்த்தையை ட்ரம்ப் கடைசி நேரத்தில் ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபுடன் தொலைபேசியில் பேசும் போது இந்த கருத்துக்களை அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அதோடு, அமெரிக்கா போர் நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாகவும், அது ஐநா சாசனத்திற்கு முரணானது என்றும் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.

ஈரான் தனது தேசிய பாதுகாப்பை பேணுவதில் உறுதியாக உள்ளதாகவும் அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
America Vs Canada: கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
Pete Hegseth: பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
Trump Vs Canada: ‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
Embed widget