மேலும் அறிய

Trump Vs Iran: “யுரேனியத்த ஒப்படைங்க, இல்லைன்னா அழிச்சுடுங்க“; ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்

US Iran War: கத்தாரில் மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் போட்டுள்ள ஒரு பதிவில், டெஹ்ரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு அமெரிக்காவிற்கு மாற்றப்பட வேண்டும் அல்லது சர்வதேச மேற்பார்வையின் கீழ் அழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ஈரான் மீது மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ட்ரம்ப் போட்ட பதிவு என்ன.?

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் போட்ட கடுமையான பதிவில், யுரேனியம் கையிருப்பை “அணுத்தூள்” என்று கூறி, அது “உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, தாயகம் கொண்டுவரப்பட்டு அழிக்கப்பட வேண்டும் அல்லது, முன்னுரிமையாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசுடன் ஒருங்கிணைந்து, இருக்கும் இடத்திலேயே அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றொரு இடத்தில் அழிக்கப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

அதோடு, இந்த செயல்முறை சர்வதேச கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும் என்றும், அணுசக்தி ஆணையமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு அதிகார அமைப்போ அப்பொருளை அழிப்பதையோ அல்லது மாற்றுவதையோ மேற்பார்வையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

தி நியூயார்க் டைம்ஸின் சமீபத்திய செய்திகளின்படி , மத்திய கிழக்கில் பதற்றங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட, அமெரிக்க ஆதரவுடனான ஒரு பரந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பின் சில பகுதிகளை விட்டுக்கொடுக்க தற்காலிக விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பல மாதங்களாக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த முன்னேற்றம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக கருதப்படுகிறது. இருப்பினும், குறிப்பாக தடைகளை தளர்த்துவது மற்றும் அணுசக்தி தொடர்பான உறுதிமொழிகள் குறித்த முக்கிய கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்த சர்ச்சைகள் மற்றும் இரு தரப்பினரின் முரண்பட்ட எதிர்பார்ப்புகள் ஆகியவை, ஒரு விரிவான ஒப்பந்தத்தை நோக்கிய முன்னேற்றத்தை தாமதப்படுத்தியதாக சிஎன்என் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்த கத்தார்

திங்களன்று கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்கள் பங்கேற்றதை ஒரு நேர்மறையான அறிகுறி என கூறியுள்ள மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர், வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையிலான ராஜதந்திர மத்தியஸ்தராக தோஹாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, ஈரானிய அதிகாரிகள் பல முனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டாலும், உடனடியாக திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர். அது குறித்து தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகெய், “விவாதத் தலைப்புகளில் பெரும்பகுதி குறித்து நாங்கள் முடிவுகளுக்கு வந்துள்ளோம் என்பது உண்மைதான், ஆனால், இது ஒரு உடனடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என்பதை குறிக்கிறது என்று யாரும் உரிமை கோர முடியாது. அமெரிக்க அதிகாரிகளின் நிலைப்பாடுகளில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள், ஒவ்வொரு பேச்சுவார்த்தையையும் சிக்கலாக்குகின்றன,” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், தற்போது ஈரான் மீது அமெரிக்கா ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதால், பேச்சுவார்த்தைகளின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்கனவே நிலவும் சூழலில், தற்போது என்ன நடக்குமோ என உலகமே எதிர்பார்த்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
Embed widget