மேலும் அறிய

Kamala Harris: அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராகிறாரா? இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் - பைடன் அவுட்?

Kamala Harris: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kamala Harris: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் விலகிவிடுவார் என கூறப்படுகிறது.

அமெரிக்க தேர்தல் - ஓங்கும் டிரம்பின் கை: 

 அமெரிக்க அதிபர் தேர்தலில் வரும் நவம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபரான ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பும் பிரதான வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். ஆரம்பத்தில் இருதரப்பினருக்கும் இடையே தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து இரண்டு வேட்பாளர்கள் இடையே நடைபெற்ற விவாதங்கள் மற்றும் டிரம்பின் மீதான துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் தேர்தல் களம் அவருக்கு ஆதரவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் பைடனுக்கு உச்சகட்ட நெருக்கடி:

டிரம்ப் ஒருபுறம் தீவிர பரப்புரையால் ஆதரவு திரட்ட, வயது மூப்பு காரணமாக பைடனின் (81) பேச்சில் ஏற்படும் தடுமாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளும் எதிர்தரப்பினருக்கு சாதகமாக மாறியுள்ளன. இதனால், பைடன் தேர்தலில் இருந்து விலக் வேண்டும் என்ற கருத்து,  அவர் சார்ந்த ஜனநாயக கட்சியிலேயே  வலுத்துள்ளது. குறிப்பாக முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “ஜோ பைடனின் வெற்றிக்கான பாதை வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், அமெரிக்க அதிபர் தனது வேட்புமனுவின் நம்பகத்தன்மையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும்” தனிப்பட்ட முறையில் பைடனிடம் பேசியதாக கூறப்படுகிறது. மற்றும் அதேகட்சியை சேர்ந்த சபாநாயகரான நான்செ பெலோசி பேசுகையில், “ பைடன் போட்டியிலிருந்து பைடன் விலகிச் செல்லாவிட்டால், ஜனநாயகக் கட்சியினர் ஆட்சியை கைப்பற்றும் திறனை இழக்க நேரிடும்” என தனிப்பட முறையில் வலியுறுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தேர்தலில் இருந்து விலகும் பைடன்?

சொந்த கட்சியினரே தேர்தலில் இருந்து விலகும்படி தொடர்ந்து வலியுறுத்தும் சூழலில் தான், 81 வயதான பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே, தேர்தல் தொடர்பான பல தரவுகளும், பைடனின் வெற்றி வாய்ப்பு தொடர்பாக எதிர்மறையான முடிவுகளையே வெளிக்காட்டுகின்றன. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலகலாம் என தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. 

அதிபர் வேட்பாளராகும் கமலா ஹாரிஸ்?

உட்கட்சி அழுத்தங்களை தொடர்ந்து பைடன் தேர்தலில் இருந்து விலகினால், தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் (59) ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், கட்சியில்79 சதவிகிதம் பேரின் ஆதரவு கிடைக்கும் என அண்மை கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பொதுமக்களிடையே சிஎன்என் நடத்த்ய கருத்து கணிப்பில் 47 சதவிகிதம் பேர் டிரம்பிற்கு ஆதரவாகவும், 45 சதவிகிதம் பேர் கமலா ஹாரிஸிற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். இதனால், கமலா ஹாரிஸ் மாற்று வேட்பாளராக களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  ஒருவேளை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்க வரலாற்றில் அதிபராகும் முதல் பெண் என்ற வரலாற்று சிறப்பை கமலா ஹாரிஸ் பெறுவார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.

யார் இந்த கமலா ஹாரிஸ்?

கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்த கமலா ஹாரிஸ், அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ஜோ பைடனை அதிபர் வேட்பாளராக ஆதரிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து ஜனவரி 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார். இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், முதல் கறுப்பின மற்றும் முதல் தெற்காசியப் பெண் இவர்தான். கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாய் இந்தியாவைச் சேர்ந்தவர். சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராகவும், கலிபோர்னியா மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலாகவும் பணியாற்ற்யுள்ளார். இவர் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற போது, ஒட்டுமொத்த இந்தியாவுமே பெருமை கொண்டது. குறிப்பாக அவரது தாயார் பிறந்த ஊரான தமிழ்நாட்டின் தஞ்சைப் பகுதியில் உள்ள பல கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. பல சமயங்களில் இந்தியா உடனான தனது உறவை, கமலா ஹாரிஸ் பெருமையாக வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget