மேலும் அறிய

உத்தரவிட்டாரா உள்துறை அமைச்சர் அமித்ஷா? குற்றம் சாட்டிய கனடா - கொத்தெழுந்த இந்தியா!

India Canada Issue: மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து கனடா அரசு தெரிவித்த கருத்துக்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

India Canada Issue: இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான பிரச்னையானது நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. 

நிஜ்ஜார் கொலை வழக்கு:

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் வாழும் பகுதியை , தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் அமைப்பினர்  வலியுறுத்தி வருகின்றனர். அவ்வப்போது , இந்தியாவுக்கு எதிராக கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காலிஸ்தான் அமைப்பினர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
 
இந்த தருணத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் , சீக்கிய பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்றும் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,  தற்போது வரை இந்தியாவின் தலையீடு தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூரவ தகவலையும் கனடா அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அமித்ஷா மீது குற்றச்சாட்டு:

நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில், கனடாவிற்கான இந்தியாவின் தூதர் சஞ்சய் குமார் வர்மாவின் பெயரை குறிப்பிட்டதற்காக கனடாவை, வெளியுறவு அமைச்சகம் கடுமையாக சாடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.  அதனை தொடர்ந்தே, கனடாவிற்கான இந்தியாவின் உயர் தூதரக அதிகாரி மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்ட  தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற முடிவு செய்த நிலையில், கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாதியாக கருதப்படும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவானது மோசமான நிலைக்கு சென்றுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கனடாவில் உள்ள சீக்கியர்கள் குறித்தான உளவுத்தகவலை சேகரிக்குமாறு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மாரிசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா எச்சரிக்கை:

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது , “ இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா வைத்துள்ளது. இதுபோன்ற கருத்துக்களுக்கு கனடா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் இதுகுறித்து கனடா தூதர் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  
 

தலைப்பு செய்திகள்

America Vs Iran China: ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்
ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget