Ind Pak War: எதிரியின் பலம், வெளிப்படும் இந்தியாவின் வீரம் - பாகிஸ்தானில் குவிந்துள்ள சீன ஆயுதங்கள் - விவரம்
Pak China Weapons: இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும், பாகிஸ்தானின் முப்படைகளின் ஆயுத பலம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Pak China Weapons: சீனாவிடம் இருந்து வாங்கிக் குவித்துள்ள ஆயுதங்களை கொண்டு தான், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் மல்லுக்கட்டி வருகிறது.
பாகிஸ்தானில் குவியும் சீன ஆயுதங்கள்:
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நிமிடத்திற்கு நிமிடம் தீவிரமடைந்து வருகிறடு. எதிரியின் வான்வழி தாக்குதலை நமது ராணுவம் தீரத்துடன் எதிர்கொண்டு, சேதங்களை பெரும்பாலும் தவித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் முப்படைகளில் உள்ள ஆயுதங்களின் பலம் குறித்து அறிவது, நமது ராணுவம் திறமையான செயல்பாட்டினை உணரச் செய்யும். அதன்படி, கடந்த 2010ம் ஆண்டு வரை பாகிஸ்தானின் முதன்மையான ஆயுத வழங்குநராக அமெரிக்கா தான் இருந்து வந்தது. ஆனால், அவர்கள் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தானின் தாலிபன்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், 2016ம் ஆண்டுடன் இருநாடுகள் இடையேயான ஆயுத வர்த்தகம் வறண்டுபோனது. அந்த வெற்றிடத்தை நிரப்ப குதித்த சீனா, தற்போதைய பாகிஸ்தானின் ஆயுதக் கிடங்கில் உள்ள 80 சதவிகித ஆயுதங்களை விநியோகித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் - காலாட்படை:
பொருளாதார சிக்கல் மற்றும் தடைகளையும் மீறி, பாகிஸ்தான் ராணுவம் நவீனமாக இருக்க சீனா ஏராளமான ஆயுதங்களை வழங்கியுள்ளது. தரை மார்க்க தாக்குதலை மேற்கொள்வதற்கு மட்டுமின்றி, வான் வழி தாக்குதல்களை தடுக்க கேடயமாக SAM தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு,
- VT-4 மெயின் பேட்டில் பீரங்கிகள்: இந்தியாவின் பீஷ்மா மற்றும் அர்ஜுன் பீரங்கிகளை தாக்குவதற்கு ஏதுவான VT-4 மெயின் பேட்டில் பீரங்கிகள் வழங்கியுள்ளது. 189 மில்லியன் டாலர்கள் மதிப்பில், 176 டேங்குகள் பாகிஸ்தான் வசம் உள்ளது.
- SH-15 155mm வீல்ட் ஹவுடிஜெர்ஸ்: K-9 வஜ்ரா தானியங்கி இயந்திர துப்பாக்கிகளை எதிர்கொள்ள திறன் கொண்டதாக கூறப்படும் SH-15 155mm வீல்ட் ஹவுடிஜெர்ஸ் பாகிஸ்தான் வசம் உள்ளன. இத்தகைய வாகனங்கள் 500 மில்லியன் மதிப்பில் 236 அந்த ராணுவத்தில் உள்ளன.
- LY-80 மீடியம் ரேஞ்ச் வான் பாதுகாப்பு அமைப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடிய LY-80 மீடியம் ரேஞ்ச் வான் பாதுகாப்பு அமைப்பும் பாகிஸ்தானிடம் உள்ளன. இது 15 கிலோ மீட்டர் உயரம் வரை பாய்ந்து 40 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை ரேடார் மூலம் அடையாளம் கண்டு தாக்கி அழிக்கக் கூடியது. இத்தகைய 9 அமைப்புகள் 599 மில்லியன் செலவில் பாகிஸ்தான் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இது எதிரிநாட்டு வான்வழி தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது
பாகிஸ்தான் ராணுவம் - விமானப்படை:
- JF-17 விமானங்கள்: விற்பனையாக இல்லாமல் சீனாவுடன் சேர்ந்து இந்த போர் விமானங்களை பாகிஸ்தான் தயாரித்தது. 2015-16 காலககட்டத்தில் பிளாக் 2 விமானங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பிளாக் 3 விமானங்களை தயாரித்து வருகிறது. ரஃபேலுக்கு போட்டியாக, இதனை பாகிஸ்தான் களமிறக்கியுள்ளது.
- J-10C ஃபயர்பேர்ட்: வான் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 25 JF-17 போர் விமானங்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது. 4.5 தலைமுறையை சேர்ந்த இந்த சிங்கிள் இன்ஜின் விமானம் ஏர் டு ஏர் தாக்குதலில் திறம்பட செயல்படக்கூடியது.
- ஆளில்லா சிறிய ரக போர் ட்ரோன்கள்: சீனாவின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட UCAV எனப்படும் இந்த ஆளில்லா சிறய ரக போர் ட்ரோன்கள், துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை பாகிஸ்தானிற்கு வழங்குகின்றன. இத்தகைய ட்ரோன்களை பயன்படுத்தி தான், ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் தற்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
- லாங் ரேஞ்ச் வான் பாதுகாப்பு அமைப்பு: HQ-9 குடும்பத்தைச் சேர்ந்த இந்த அமைப்பானது, ஃபைட்டர் ஜெட்ச், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கலை தடுத்து வான் பாதுகாப்பை உறுதி செய்வதில் வல்லமை கொண்டது.
- கரகோரம் ஈகிள் AWACS: முன்னெச்சரிக்கை மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் விமானமானது பாகிஸ்தான் வான்படையில் முக்கிய பங்கு வகிக்கிறது. 278 மில்லியன் செலவில் 4 கரகோரம் ஈகிள் AWACS விமானங்கள் பாகிஸ்தான் வசம் உள்ளன.
பாகிஸ்தான் ராணுவம் - கப்பற்படை:
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பலவீனமாக இருந்த பாகிஸ்தானின் கடற்படை, சீனாவின் தொழில்நுட்பத்தால் நவீனமடைந்துள்ளது. அரபிக்கடலில் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாதுகாப்பின் கப்பற்படை வலுவடைந்துள்ளது.
- ஹேங்கோர் கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்: ஏர் இண்டிபெண்டண்ட் புரபொல்சன் மூலம் மேம்படுத்தப்பட்ட நீர்மூழ்கி தொழில்நுட்பத்தை இந்த கப்பல்கள் கொண்டுள்ளன. பாபர் 3 க்ரூஸ் மிஸ்ஸைல் போன்ற நவீன மற்றும் வலுவான ஏவுகணைகளை செலுத்தும் திறன் இந்த கப்பல்கள் வசம் உள்ளன. சுமார் 5 பில்லியன் டாலர்கள் செலவில் 8 ஹேங்கோர் கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தான் வசம் உள்ளன.
- அஸ்மத் கிளாஸ் விரைவு தாக்குதல் கப்பல்: 8 C - 802 A ஆண்டி ஷிப் க்ரூஸ் ஏவுகணைகள் (180 கிமீ ரேஞ்ச்), மற்றும் CIWS போன்ற நெருங்கிய ஆயுத அமைப்புகளை கையாளும் திறன் இந்த கப்பல்களில் உள்ளன. 400 மில்லியன் டாலர்கள் செலவில் மதிப்பிலான 4 கப்பல்கள் பாகிஸ்தான் வசம் உள்ளன.
- TYPE054A: மிகவும் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கப்பலானது, மீடியம் ரேஞ்ச் SAM தொழில்நுட்பம், ஆண்டி ஷிப் மிசைல்ஸ், அட்வான்ஸ்ட் சென்சார்கள், நீர்மூழ்கி கப்பல்களிடம் இருந்து மறைவது, போர் நிர்வாக அமைப்பு ஆகியவற்றுடன் 32 செல் வெர்டிகல் லாஞ்ச் சிஸ்டத்தை கொண்டுள்ளது.
திறம்படி கையாளும் இந்தியா:
இப்படி பாகிஸ்தானின் மூன்று படைப்பிரிவுகளிலும், சீனாவின் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடன் முரண்பாடு நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானை தனக்கு சாதகமான நிலமாக பயன்படுத்திக் கொள்ளவே, பல்வேறு தடைகளையும் மீறி சீனா ஆயுதங்களை அள்ளி கொடுத்து வருகிறது. ஆனாலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட, அடுத்த தலைமுறை ஆயுதங்களையும் கொண்டு பாகிஸ்தானை இந்தியா மிக எளிதாகவே கையாண்டு வருகிறது.





















