Prison Safety: அடடே..! சிறை பாதுகாப்புக்காக வாத்துகளை பயன்படுத்தும் நாடுகள் - எப்படி, காரணம் என்ன?
Prison Safety: வெளிநாடுகளில் சிறைபாதுகாப்பிற்காக வாத்துகளை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Prison Safety: வாத்துகளின் சிறந்த உணர்ந்திறன் காரணமாக, வெளுநாடுகளில் சிறை பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது.
சிறை பாதுகாப்பு:
நவீனகால சிறைகளில் பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வலுவான கட்டமைப்பு தொடர்ந்து மின்னணு ரீதியாகவும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவற்றில் சில தீர்வுகள் கேட்பதற்கே ஆச்சரியத்தை அளிக்கும் அளவுக்கு வினோதமாக இருக்கின்றன. அந்த வகையில் மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சமாக சில சிறைகளில் வாத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆம் , நீங்கள் கேட்டது சரிதான் ! சில நாடுகளில், சிறைகளின் பாதுகாப்பிற்காக வாத்துகள் பயன்படுத்தப்படுகின்றன . இது விசித்திரமாகத் தோன்றலாம் , ஆனால் சிறையின் பாதுகாப்பிற்கு வாத்துகள் எவ்வாறு உதவுகின்றன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வாத்துகள் எப்படி சிறையை பாதுகாக்கின்றன ?
சிறை பாதுகாப்பிற்கு வாத்துகள் எவ்வாறு உதவுகின்றன என்று நீங்கள் யோசித்து இருக்கலாம்? அதற்கான முதல் விளக்கம், வாத்துகள் தண்ணீரில் வாழும் உயிரினங்கள். அவற்றால் தண்ணீரில் எந்த வகையான செயல்பாட்டையும் எளிதில் உணர முடியும். அதாவது வாத்துகளுக்கு உணர்திறன் அதிகம். யாரேனும் ஒருவர் சிறைக்குள் நுழைய முயன்று தண்ணீர் வழியாகச் சென்றால், வாத்துகள் வாயிலாக சிறை பாதுகாவலர்களால் எளிதாக அறிய முடியும். மேலும், வாத்துகள் அதிக சத்தம் எழுப்புகின்றன . அறிமுகம் இல்லாதவர்கள் அருகில் வந்தால் உடனே சத்தம் போடுவார்கள். இதன் மூலம் சிறைக்குள் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆபத்து குறித்து தகவல் தெரிகிறது.
வாத்துகள் அழகாக இருந்தாலும் , அவை பல விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. அதனால், வாத்துகள் நடமாட்டம் இருப்பதால், வன விலங்குகள் சிறைக்கு அருகில் வருவதில்லை . மேலும், வாத்துகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது மிகவும் விலை உயர்ந்ததல்ல. தங்களுக்கான உணவைத் தாங்களே தேடிக் கொள்கின்றன. மேலும், வாத்துக்களைப் பயன்படுத்தி இடங்களைப் பாதுகாப்பது பண்டைய காலங்களிலிருந்து நடைமுறையில் உள்ளது.
எந்த நாடுகளில் பாதுகாப்புக்காக வாத்துகள் பயன்படுகின்றன?
நெதர்லாந்து: நெதர்லாந்தில் உள்ள பல சிறைகளில் பாதுகாப்புக்காக வாத்துகள் பயன்படுத்தப்படுகின்றன . இங்கு வாத்துகள் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள நீரில் நீந்திச் செல்வதுடன், சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்தாலும் அறிய உதவுகின்றன.
அமெரிக்கா: அமெரிக்காவில் கூட, வாத்துகள் சில சிறைகளில் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன .
ஐரோப்பாவின் பிற நாடுகள்: ஐரோப்பாவின் பல நாடுகளில், சிறைகளின் பாதுகாப்பிற்காக வாத்துகள் பயன்படுத்தப்படுகின்றன .
சீனா: சீன அரசாங்கம் சமீபத்தில் சில பகுதிகளில் தங்கள் பாதுகாப்பு நாய்களை கைவிட்டு வாத்துகளை பாதுகாப்பிற்கான பயன்படுத்த தொடங்கியுள்ளது.