மேலும் அறிய

தோல்வி முகத்தில் ரிஷி சுனக்? பிரிட்டன் அரசியலில் மீண்டும் திருப்பம்.. ஆளுங்கட்சி போட்ட ஸ்கெட்ச்

போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸை போல் ரிஷி சுனக்கிற்கு எதிராகவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக செய்தகள் வெளியான உள்ளன.

அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரட்டனில் ஒரே ஆண்டில் மூன்று பிரதமர்கள் மாறினர். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்து போது பார்ட்டி நடத்தியது உள்பட பல சர்ச்சைகளில் சிக்கியதால் போரில் ஜான்சன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம், பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் பதவியேற்ற லிஸ் டிரஸ், 45 நாள்களிலேயே ராஜினாமா செய்தார்.

தேர்தலில் தோல்வியை தழுவுகிறாரா ரிஷி சுனக்?

லிஸ் டிரஸை தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக், கடந்த ஓராண்டுக்கு மேலாக அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார். போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸை போல் ரிஷி சுனக்கிற்கு எதிராகவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக செய்தகள் வெளியான உள்ளன. 

வரும் 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், வெளியாகி வரும் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ரிஷி சுனக் பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடையும் பட்சத்தில் புதிய தலைவரை தேர்வு செய்யும் முனைப்பில் அக்கட்சி உள்ளதாக தகவல்கள் வெளியான உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே, தன்னுடைய ஆதரவை பெருக்க ரிஷி சுனக் முயற்சி செய்து வருகிறார். இதன் காரணமாகவே, சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில் அவர் தன்னுடைய நிலைபாட்டை மாற்றி கொண்டார். சாதாரண பிரிட்டன் மக்களுக்கு உதவிடுவதற்காக செலவை குறைக்கும் நோக்கில் HS2 அதிவேக ரயில் இணைப்பை விரைவாக கொண்டு வருவது குறித்து ரிஷி சுனக் மறுபரிசீலனை செய்து வருகிறார்.

பிரிட்டன் அரசியலில் மீண்டும் திருப்பம்:

இருந்தபோதிலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்கள் மத்தியில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட தொழிலாளர் கட்சி இரட்டை இலக்கில் முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் எடுத்த இரண்டு கருத்து கணிப்புகளில் ரிஷி சுனக்கிற்கு மக்கள் மத்தியில் சற்று ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஆளுங்கட்சியை விட தொழிலாளர் கட்சிக்கு 21 சதவிகித அதிக மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில், ரிஷி சுனக்கிற்கு கட்சிக்கு உள்ளேயே அதிருப்தி பெருகி வருவதாக கூறப்படுகிறது. தேர்தலில் மோசமான தோல்வியை ஆளுங்கட்சி பெரும் பட்சத்தில், தலைவரை பதவியை பெற பலர் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் 13 பேர் உள்ளதாக ஆளுங்கட்சி எம்பிக்கள், மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். ஆளும் அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சர்களில் ஒருவரான கெமி படேனோச், முன்னாள் பிரதமர் ஸிஸ் டிரஸ், பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டர் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget