Mansukh Mandaviya On Covid: உலகளவில் அதிகரிக்கும் கொரோனா.. இந்தியாவின் நிலை இதுதான்..! - மத்திய அரசு விளக்கம்
சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள சூழல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மண்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மண்சுக் மாண்டவியா மக்களவையில் உரையாற்றினார். அப்போது, கடந்த சில நாட்களில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை காண்கிறோம். சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதோடு, அங்கு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனால், இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை காண முடிகிறது.
கொரோனா தொற்றை நிர்வகிப்பதில் சுகாதாரத் துறை மிகவும் முனைப்பாக உள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது. மாநில அரசுகளுக்கு இதுவரை , 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
In the wake of festive & new year season, states are advised to make sure people wear masks, use sanitisers and maintain social distancing along with increasing awareness for precautionary doses: Union Health minister Mansukh Mandaviya in LS pic.twitter.com/z3AjWxabJs
— ANI (@ANI) December 22, 2022
கண்காணிப்பு தீவிரம்:
கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், காமா, கப்பா, ஒமிக்ரான் என உருமாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் உயிரிழப்பு இல்லாமலே இருந்து வந்தது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு 4 கோடி ரூபாய் செலவில் மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் குறைவாகவே பரவுகிறது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.