Cholera Outbreak: உலகுக்கே ஒரு அலர்ட்.. மீண்டும் தலைதூக்கும் காலரா நோய்த்தொற்று.. நிதியுதவி கேட்கும் உலக சுகாதார நிறுவனம்..
இந்த வாரத்தில் மட்டும், மூன்று நாடுகளில், காலரா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என WHO காலரா குழு தலைவர் பிலிப் பார்போசா வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த வாரத்தில் மட்டும், மூன்று நாடுகளில், காலரா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என WHO காலரா குழு தலைவர் பிலிப் பார்போசா வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
முதன்முறையாக, உலக சுகாதார நிறுவனம் காலரா பாதிப்புகளை எதிர்த்துப் போராட நிதி உதவி கேட்டுள்ளது என குறிப்பிட்டார். தற்போது, உலகெங்கிலும் உள்ள 22 நாடுகள் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். 2022 ஆம் ஆண்டில் காலரா தொற்றுகள் அதிகரித்தன, பல ஆண்டுகளாக தொற்று குறைந்த நிலையில் தற்போது இது அதிகரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் செயல்படும் ஆறு பிராந்தியங்களில் ஐந்து பிராந்தியங்களில் காலரா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என பிலிப் பார்போசா குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய WHO அறிக்கையில், 2022 முதல் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறுமை, பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்ற விளைவுகள் ஆகியவை சுத்தமான நீர் மற்றும் சுகாதாரமான சூழலை மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. இது நோய்தொற்று பரவுவதற்கான முக்கிய காரணிகள் என டாக்டர் பார்போசா கூறியுள்ளார். இந்த சூழலை கையாள தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் சோதனைக் கருவிகள் மிகவும் அவசியமான ஒன்று, ஆனால் தற்போது குறைந்த எண்ணிக்கையில் தான் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 37 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது, அடுத்த ஆண்டுக்குள் இவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் உலக சுகாதார நிறுவனம் முதன்முறையாக காலரா நோய்தொற்றை சமாளிக்க $25 மில்லியன் நிதியை வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகில் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரமான சூழல் பெரும்பாலானோருக்கு கிடைப்பது இல்லை. இவை இரண்டும் மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை தேவையாகும். சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் இருந்தாலே காலரா நோய்த்தொற்றை ஒழித்து விடலாம் எனக் கூறுகின்றனர். ஆப்பிரிக்காவில் காலரா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொசாம்பிக்கில் ஃப்ரெடி புயலின் தாக்கத்திற்கு பின் நிலமை மோசமடைந்துள்ளது. முதலில், செப்டம்பர் மாதம் நியாசா மாகாணத்தில் உள்ள லாகோ மாவட்டத்தில் காலரா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பிப்ரவரி 19 நிலவரப்படி, மொசாம்பிக் பகுதியில் மொத்தம் 5,237 பேர் காலரவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலரா பாதித்த ஆறு மாகாணங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாகும், மழைக்காலம் தொடர்வதால் பாதிப்பு அதிகரிக்கும் என WHO தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 ஜனவரி 2023 நிலவரப்படி, 10 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 26,000 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 660 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட 15 நாடுகளில், கிட்டத்தட்ட 80,000 பேருக்கு காலரா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதில் 1,863 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான மலாவி 20 ஆண்டுகளில் மிக மோசமான காலரா பாதிப்பை எதிர்கொள்கிறது, மேலும் எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா உள்ளிட்ட பிற நாடுகளில் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன என்று WHO தெரிவித்துள்ளது. உலகளவில், ஹைட்டி, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் சிரியாவில் உள்ள மக்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )