திருக்குறளுக்கு விழா! துபாயில் நிகழ்ச்சி! நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமா? QR CODE-ஐ ஸ்கேன் பண்ணுங்க!
உலகப் பொதுமறையான திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கமாக துபாயில் திருக்குறளுக்கு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகப் பொதுமறையான திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கமாக துபாயில் திருக்குறளுக்கு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்கைப்ளூ மற்றும் டத்தோ மனிகண்டமூர்த்தி வேலாயுதம் வழங்கும் திருக்குறள் விழா துபாயில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி வரும் மே 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: சேக் ரசித் ஆடிடோரியம், இந்தியன் மேல் நிலைப்பள்ளி, ஓட் மேத்தா, துபாய்
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக துபாயின் இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன், புதுச்சேரி பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் திருக்குறள் விவாதம் மற்றும் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில், பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், ஞானசம்பந்தன், சுமதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தேர்தல் வியூக வகுப்பாளர் கு.பார்த்திபன், தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தால் உங்களுக்கான நுழைவுக்கட்டணம் இலவசம். QR CODE-ஐ ஸ்கேன் செய்து உடனே பதிவு செய்யுங்கள்.
முதல் 1,330 பார்வையாளர்களுக்கு மட்டும் சிறப்பு பரிசுகள், ருசியான இரவு உணவு, இலவச கூப்பன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் நேரலையை ஏபிபி நாடுவின் லைவில் நீங்கள் காண முடியும்.





















