Imran Khan: கைது செய்ய நெருங்கிய போலீஸ்: வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு இம்ரான் கான் சொன்னது என்ன?
Imran Khan : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. ' Pakistan Tehreek-e-Insaf’ கட்சி தலைவர் இம்ரான் கானின் லாகூரில் அமைந்துள்ள இல்லத்தை காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். இம்ரான் கான் ஆதாரவாளர்கள் காவல் துறையினரை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் `என்னைக் கொன்றாலும்கூட, நான் இல்லாமல் உங்களால் போராட முடியும் என்பதை நிரூபியுங்கள்!" மக்களே என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
My message to the nation to stand resolute and fight for Haqeeqi Azadi & rule of law. pic.twitter.com/bgVuOjsmHG
— Imran Khan (@ImranKhanPTI) March 14, 2023
இம்ரான் வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாடியதன் விவரம்:
“என்னை கைது செய்வதற்காக காவல் துறையினர் வந்திருக்கின்றனர். நான் சிறைக்குச் சென்றுவிட்டால் மக்கள் தூங்கிவிடுவார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் தவறானது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். நாங்கள் (மக்கள்) உயிர்ப்புடன் இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்ந்துங்கள். உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும். தெருக்களில் இறங்கிப் போராட வேண்டும். கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். உங்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியிருக்கிறேன்; உங்கள் போரில் பங்கெடுத்துள்ளேன்; தொடர்ந்து போராடிக்கொண்டேயிருப்பேன். ஆனால், எனக்கு எதாவது ஆகிவிட்டாலோ, கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ கூட இம்ரான் கான் இல்லையென்றாலும் உரிமைகளுக்காக (மக்கள்)போராட முடியும்; போராடுவோம் என்பதை நீங்கள் உணர்த்த வேண்டும். இதைஅரசிற்கு உணர்த்த வேண்டும். அரசின் அடிமைத்தனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ல மாட்டீர்கள் என்பதை நிரூப்பிக்க வேண்டும். பாகிஸ்தான் ஹிந்தாபாத்!. ” என்று பேசியிருக்கிறார்.
இம்ரான் கான் மீது வழக்கு:
வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாக்கும் தோஷ்கானாவிடமிருந்து (Toshakhana) அவற்றை மலிவு விலையில் விற்றதாக தொடரப்பட்ட வழக்கு
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகமல் இருந்ததோடு மட்டுமல்லாமல், பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பானது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு மார்ச் 16-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. அதோடு மட்டுமல்லாமல், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டியதாகவும் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்திருந்தது. தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களும் - காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கல்வீச்சு, தடியடி போன்ற சம்பவங்களால் பலர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இம்ரான் கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது.
இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடிப்பத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் வீட்டிற்கு முன்பு குவியும் ஆதாரவாளர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். காவல் துறையினர் இம்ரான் கானை கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சம் இருப்பதாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களில் இம்ரான் கான் ஆதாரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இம்ரான் கான் எந்நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையே நீடிக்கிறது.