Boris Johnson :58-வது வயதில் 8-வது குழந்தைக்கு தந்தையாகும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்..
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன் கர்ப்பமாக உள்ளார். இதன் மூலம் போரிஸ் ஜான்சன் தனது 58-வது வயதில் 8-வது குழந்தைக்கு தந்தையாகிறார்.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாம் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் போரிஸ் ஜான்சன் தனது 58வது வயதில் 8-வது குழந்தைக்கு தந்தையாகிறார்.
58 வயதாகும் போரிஸ் ஜான்சனுக்கு பிறக்கவிருக்கும் குழந்தை 8-வது குழந்தை ஆகும். போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன், வெள்ளிக்கிழமை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.
ஜான்சன் - கேரி தம்பதிக்கு ஏற்கனவே ரோமி என்ற ஒரு வயது மகளும், வில்பிரட் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். இவர்கள் மே 2021-ல் திருமணம் செய்து கொண்டனர். கேரி தனது இரண்டு குழந்தைகளையும் தன் கையில் பிடித்துள்ள ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து தனது கர்ப்பம் குறித்து பதிவிட்டுள்ளார்.
இன்னும் சில வாரங்களில் குழந்தை பிறந்து விடும் என்றும், கடந்த 8 மாதமாக தான் மிகவும் சோர்வாக உணர்ந்ததாகவும், ஆனால் தன் சிறு குழந்தையை பார்க்க தங்களால் இன்னும் பொறுமை காக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். வில்ப் மீண்டும் தான் ஒரு பெரிய சகோதரனாக உள்ளது குறித்து உற்சாகமாக இருப்பதாகவும், இடைவிடாமல் அதைப்பற்றி பேசி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
போரிஸ் ஜான்சனுக்கு கேரி 3-வது மனைவி ஆவார். ஏற்கனவே போரிஸ் ஜான்சனுக்கு தன்னுடைய முதல் மனைவிகளுடன் 5 குழந்தைகள் பிறந்தன. கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட போரிஸ் ஜான்சன் - கேரி தம்பதிக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது. 58 வயதாகும் போரிஸ் ஜான்சனுக்கு தற்போது பிறக்க உள்ளது 8-வது குழந்தையாகும்.
முன்னாள் மனைவி மெரினா வீலர் என்பவருடன் நான்கு பிள்ளைகள் உள்ளனர். 2009-ல் Helen Macintyre என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் போரிஸ் ஜோன்சனுக்கு Stephanie என்ற மகள் உள்ளார். மேலும் அவரின் முதல் மனைவி அலெக்ரா மோஸ்டின் ஓவனுடன் அவருக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
35 வயதாகும் கேரி ஒரு பிரிடிஷ் ஊடக ஆலோசகர். கன்செர்வேடிவ் கட்சியில் ஊடக அதிகாரியாகவும் பணியாற்றினார். அவர் கடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனமான Oceana-வின் மூத்த ஆலோசகராகவும் உள்ளார்.