எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் வாயு கசிவு..! பதறிய பணியாளர்கள்..! சுவீடனில் பரபரப்பு..!
ஸ்வீடனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென வாயுகசிவு ஏற்பட்டதால், தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

ஸ்வீடன் நாட்டில் அமைந்துள்ளது ஹசிங்ஜென். இங்கு நைனாஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று திடீரென இந்த சுத்திகரிப்பு ஆலையில் அபாய அலாரம் ஒலித்தது. இந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென எரியக்கூடிய திரவங்கள் மற்றும் வாயு கசிந்துள்ளது. இதன் காரணமாகவே, அபாயத்தை எச்சரிக்கும் விதமாக அலாரம் ஒலித்துள்ளது.
இதையடுத்து, தொழிற்சாலையில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும், தொழிற்சாலை அருகே இருந்த மற்ற ஆலைகளில் இருந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். மேலும், வாயு கசிவு ஏற்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு சாலைக்கு செல்லும் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் மூடப்பட்டது. இந்த தகவலை அந்த நிறுவன பொறுப்பு அதிகாரி மேடலின் நில்சன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

