பர்கருக்கு பல்லு முளைச்ச மாதிரி இருக்குதானே... இது என்ன உயிரினம் தெரியுமா? இன்ஸ்டா வைரல்
வித்தியாசமான மீன் தொடர்பான படம் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
பொதுவாக புதிய வகையான அல்லது ஒரு வித்தியாசமான வகையான உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை அனைவரின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அப்படி ஒரு உயிரினம் தான் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த உயிரினத்தை ஒருவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது கண்டறிந்துள்ளார். யார் அவர்? என்ன உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது?
ரஷ்யாவைச் சேர்ந்த மீனவர் ரோமன் ஃபெடார்ஸ்டோவ். இவர் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது கிடைக்கும் வித்தியாசமான உயிரினங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் அவர் ஒரு பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவு தற்போது வேகமாக வைரலாக தொடங்கியுள்ளது. ஏனென்றால் அந்தப் பதிவில் அவர் ஒரு மீன் படத்தை பதிவிட்டுள்ளார். அந்த மீன் பார்ப்பதற்கு ஒரு சீஸ் பர்கரின் நடுவில் பற்கள் இருக்கும் வடிவத்தில் அமைந்துள்ளது.
View this post on Instagram
இதைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பதிவை கண்ட அனைவரும் இது உண்மையா? இப்படி ஒரு மீன் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் இதை பார்த்து இது புதிய வகையான சிக்கன் செண்ட்வெஞ் என்று நினைத்தேன் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இவருடைய கணக்கில் இதுபோன்று பல்வேறு விதமான வித்தியாசமான உயிரினங்கள் தொடர்பாக பதிவுகளும் உள்ளன. அவற்றையும் பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். இவர் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது கிடைக்கும் வித்தியாசமான உயிரினங்களை பிடித்து அதை தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டு அதற்கு பெயர் என்ன என்பதையும் தெரிந்து கொள்வதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
மேலும் படிக்க: 16 வருடம் சிறையில் இருந்தவரிடம் மன்னிப்பு கேட்ட எழுத்தாளர்: காரணம் இது தான்!