Elon Musk on Twitter: ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம்... வரும் முன்னே பீதியை கிளப்பும் எலான் மஸ்க்
எலன் சமர்ப்பித்திருக்கும் திட்ட வடிவத்தில், ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது என ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ட்விட்டர் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இயங்கி வருபவர் தொழிலதிபர் எலன் மஸ்க். உலகத்தில் என்ன நடந்தாலும் அது தொடர்பாக ட்வீட் செய்வதும் அதனை பேசுபொருளாக்குவதுமே அவரது ஸ்டைல். உலகத்தலைவர்கள், பல நிறுவனங்களில் தலைவர்கள் என பலரையும் டேக் செய்து ஜாலியாக அரட்டை அடித்தும், விவாதங்களை செய்தும் டைம் பாஸ் செய்வார் எலன் மஸ்க்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் எலன் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்ற தனது சொந்த நிறுவனமான டெஸ்லாவின் பங்குகளை அவர் விற்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் மீதும் வங்கிகளில் அவர் கடன் வாங்க இருக்கிறார்.
Let’s make Twitter maximum fun!
— Elon Musk (@elonmusk) April 28, 2022
ஆனால், ட்விட்டர் நிறுவனம் மீது வங்கிகளில் கடன் வாங்குவதற்கு முன்பு புதிய நிர்வாகத்தின் கீழ் இந்நிறுவனம் எப்படி இயங்கும் என்ற திட்ட வடிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இப்போது, ட்விட்டர் நிறுவனம் எலன் மஸ்க்கிற்கு கை மாறும் நிலையில் இருப்பதால், கடன் வாங்குவது எளிதான காரியமாக இருக்காது.
இந்நிலையில்தான், மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. எலன் சமர்ப்பித்திருக்கும் திட்ட வடிவத்தில், ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது என ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
எலன் மஸ்க்கின் இந்த திட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் பணி செய்யும் பல ஊழியர்கள் வேறு வேலையை தேட ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. எலன் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு, நிறுவனத்தின் வருவாயை ஈட்டுவது சவாலான வேலையாக இருக்கும் என தெரிகிறது. போட்டி நிறுவனங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நல்ல வருவாயை ஈட்டி வரும் நிலையில், ட்விட்டரின் வருவாயை பெருக்க புதிய முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிகிறது. அந்த வரிசையில், வேறு தளங்களில் வைரல் ட்வீட்களை எம்பெட் செய்யவும், பதிவிட்ட ட்வீட்டை எடிட் செய்யவும் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், எலன் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்