Elon Musk meets PM Modi: ’நான் மோடியின் ரசிகன்..’ பிரதமர் மோடியை சந்தித்த பின் எலான் மஸ்க் உற்சாகம்..!
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியுடன் டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்கை சந்தித்தார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியுடன் டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்கை சந்தித்தார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு மஸ்க், தான் மோடியின் ரசிகர் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ பிரதமர் மோடி உண்மையிலேயே இந்தியாவிற்கு சரியான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் சொல்ல முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார், மேலும் அது இந்தியாவின் சாதகமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறார். அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு வருகை தர, நான் தற்காலிகமாகத் திட்டமிட்டுள்ளேன். அதற்காகவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங்கை இண்டர்நெட்டை இந்தியாவிற்கும் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். இதன்மூலம், இந்தியாவில் உள்ள தொலைதூர மற்றும் கிராமப்புற கிராமங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ” என தெரிவித்தார்.
#WATCH | Tesla and SpaceX CEO Elon Musk, says "I can say he (PM Modi) really wants to do the right things for India. He wants to be open, he wants to be supportive of new companies and make sure it accrues to India's advantage... I'm tentatively planning to visit India again next… pic.twitter.com/7Et2nIX3ts
— ANI (@ANI) June 20, 2023
தொடர்ந்து, பிரதமர் மோடி அவரை இந்தியாவிற்கு அழைத்ததாகவும், அழைப்பை ஏற்ற அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கு தற்காலிகமாக திட்டமிட்டுள்ளதாகவும் மஸ்க் கூறினார். மேலும், விரைவில் தனது ஸ்டார்லிங்க் இணையத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என்று நம்புவதாக கூறினார்.
எலான் மஸ்க், இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருப்பதாகவும் கூறினார். அதில்,
- உலகில் உள்ள எந்த பெரிய நாட்டையும் விட இந்தியா அதிக அளவிலான மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.
- ஸ்டார்லிங்க் இண்டரெண்ட், தொலைதூர மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், தங்களை மீண்டும் சந்திப்பது எனக்கு மிகப்பெரிய கவுரவம் என குறிப்பிட்டுள்ளார்.
It was an honor to meet again
— Elon Musk (@elonmusk) June 20, 2023
அமெரிக்காவில் பிரதமர் மோடி எலான் மஸ்கை தவிர, ழுத்தாளர் மற்றும் பிரபல அமெரிக்க கல்வியாளர் ராபர்ட் தர்மன் மற்றும் லெபனான்-அமெரிக்க எழுத்தாளர் நாசிம் நிக்கோலஸ் தலேப் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.