
Space Walk: விண்வெளியில் முதல் நடை பயணம்: நாசாவுக்கே டஃப் கொடுக்கும் மஸ்க்; அடுத்த திட்டம் இதுவா.?
Space Walk Space - X: இதுவரை விண்வெளியில் விண்வெளி வீரர்கள் யாரும் செல்லாத தூரத்தை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அடைந்து சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் வீரர்கள் நடை பயணம் மேற்கொண்டு அசத்தியுள்ளனர்.

விண்வெளியில் ,விண்வெளி வீரர்கள் விண்கலத்தை விட்டு வெளியே வந்து விண்கலத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர். குறிப்பாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவ்வப்போது வெளியே வந்து தங்களது விண்வெளியில் நடந்து கொண்டே ஆராய்ச்சி மற்றும் விண்கலனில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர். இதுவரை இந்த பணிகளை அரசு நிறுவனங்களான நாசா உள்ளிட்டவைதான் மேற்கொண்டு வந்தன. ஆனால் முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று விண்வெளி நடை பயணத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அது வேறு எந்த நிறுவனமும் இல்லை, உலக டெக் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கும் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்தான்.
போலரிஸ் டான்
இந்த திட்டத்தின் பெயர் போலரிஸ் டான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது. போலரிஸ் டான் என்ற விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்கள் பயணித்துள்ளனர். அவர்களில் ஜாரெட் ஐசக்மேன், அன்னா மேனன், ஸ்காட் போடீட், சாரா கில்லிஸ் ஆகிய 4 பேர் அடங்குவர். இவர்கள் 4 பேரும் , நேற்றைய தினம் விண்வெளி நடைப்பயணத்தை அனுபவத்தினர்.
Day 3 update of the Polaris spacewalk mission https://t.co/OsmpOz5OS8
— Elon Musk (@elonmusk) September 12, 2024
விண்வெளியில் நடை பயணம்:
இவர்கள் விண்வெளியில் இருப்பது போன்ற காட்சியையும், அங்கிருந்த பூமியை காண்பிக்கும் காட்சியையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், அவர்களில் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளியில் நடப்பது போன்ற காட்சியையும் வெளியிட்டுள்ளது.
இதன் இறுதி பயணமானது பூமிக்கு மேலே சுமார் 1400 கி,மீ வரை செல்லும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொலைவில் , இதுவரை எந்த விண்வெளி வீரர்களும் சென்றதில்லை என்ற தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இப்பதியில் கதிரியக்கத்தின் தாக்குதல் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Commander @rookisaacman conducting suit mobility tests while Dragon flies between Australia and Antarctica pic.twitter.com/yj3vFOTNzQ
— SpaceX (@SpaceX) September 12, 2024
அடுத்த திட்டம்:
அந்த உயரத்தில், அவர்களது அணிந்துள்ள ஆடையின் தடுப்பு திறனை ஆராயவும் இதன் பயணத்தின் திட்டத்தின் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் ஆடையை செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் பயணத்திட்டத்தில் எலான் மஸ்க் நிறுவனம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் ஆபத்தும் இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
நாட்டின் அரசு நிறுவனங்கள் தொட முடியாத சில உச்சங்களைக் கூட எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொட்டுள்ளதாக பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

