Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்திவைத்த பரஸ்பர வரிகளுக்கான கால அவகாசம் விரைவில் முடியும் நிலையில், அதை நீட்டிக்கும் எண்ணம் இல்லை, ஆனால் ஒன்றை மட்டும் செய்வேன் என அவர் கூறியுள்ளார். அது என்ன தெரியுமா.?

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ட்ரம்ப், தங்கள் மீது வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார். பின்னர் அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து, ஒப்பந்தங்களை மேற்கொள்ளமாறு அறிவுறுத்தினார். இந்த நிலையில், அவர் விதித்த கெடு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒன்றை செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். அது என்ன தெரியுமா.?
“கால அவகாசத்தை நீட்டிக்கும் எண்ணம் இல்லை, ஆனால் கடிதம் அனுப்புவேன்“
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரியை, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வாற்கு வசதியாக 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார். அந்த கால அவகாசம் வரும் ஜூலை 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், பரஸ்பர வரி விதிப்பு மேலும் சில காலங்களுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், கால அவகாசத்தை நீடடிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று தெவித்துள்ளார்.
ஆனால், அதற்கு பதிலாக, ''வாழ்த்துகள்.!! அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உங்களுக்கு அனுமதி அளிக்கிறோம். அதற்காக, 25 சதவீத வரியோ, 20 சதவீதமோ, 40 அல்லது 50 சதவீதமோ வரி செலுத்த வேண்டியிருக்கும்“ என சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது நிர்வாகத்தால் அனுப்பப்படும் கடிதங்களில், அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதங்கள் குறித்து விளக்கம் இருக்கும் என்றும், ஒவ்வொரு நாட்டுடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் அமெரிக்காவை அவர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை மேற்கோள் காட்டி, சில சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகள் தேவையில்லை என்பதையும் பரிந்துரைக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டனில் முகாமிட்டுள்ள இந்திய குழு
அமெரிக்க ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றான பரஸ்பர வரி விதிப்பில், நட்பு நாடான இந்தியாவும் தப்பவில்லை. அதுமட்டுமல்லாமல், இந்தியா தங்கள் மீது அதிக வரியை விதிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் ட்ரம்ப்.
இந்த நிலையில், இந்தியா விதிக்கும் வரிக்கு இணையாக பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இருந்தாலும், சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு, வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்தி வைத்தால், அப்போது முதல், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்திய குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சமீபத்தில் பேசிய ட்ரம்ப், இந்தியாவுடன் நல்ல முறையில் ஒரு பெரிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கால அவகாசம் முடிவதற்குள், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எப்படியாவது வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, இந்திய வர்த்தகக் குழு ஒன்று வாஷிங்டனில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






















