மேலும் அறிய

Trump on IND-PAK War: இந்தியா ஒத்துக்கற வரைக்கும் விடமாட்டார் போலயே.! போரை நிறுத்தியதாக மீண்டும் கூறிய ட்ரம்ப்

வரிகளை முன்வைத்தே அனைத்து இடங்களிலும் அமைதியை நிலைநாட்டி சாதித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக மீண்டும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வரி என்ற ஒன்றை வைத்து தான் அமைதியை தான் நிலைநாட்டி வருவதாக தெரிவித்ததோடு, அதற்கு உதாரணமாக மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மீண்டும் இந்தியாவை வம்பிழுத்த ட்ரம்ப்

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப்பிடம், வரிகள் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு வரிகள் விதிக்கும் அதிகாரம் இல்லையென்றால், 7 போர்களில் குறைந்தது நான்கு போர்கள் வெடித்திருக்கும்." என்று கூறினார்.

மேலும் வர்த்தக அச்சுறுத்தல்களை பயன்படுத்தி அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆயுத மோதலின் போது அணு ஆயுதம் ஏந்திய இரண்டு அண்டை நாடுகள் ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதற்கு தனது சர்ச்சைக்குரிய வரிகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.

அதோடு, இந்த வரி காரணமாகவே அமெரிக்கா ஒரு சமாதானத்தை உருவாக்குபவராக திகழ்வதாகவும், இது வாஷிங்டனுக்கு "நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை" ஈட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

"இந்தியாவையும் பாகிஸ்தானையும் பார்த்தால், அவர்கள் அதைத் தொடங்கத் தயாராக இருந்தனர். 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... நான் அவர்களிடம் சொன்னதைச் அப்படியே இங்கு சொல்ல விரும்பவில்லை, ஆனால் நான் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது... நாங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை சம்பாதித்ததோடு மட்டுமல்லாமல், வரிகளால் நாங்கள் அமைதியை காக்கும் படையினராகவும் இருக்கிறோம்." என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்தியா மறுத்த பிறகும் போரை நிறுத்தியதாக தொடர்ந்து கூறிவரும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் இதுபோன்று கூறுவது இது முதல் முறை அல்ல. மே மாதம் 10-ம் தேதி, வாஷிங்டனின் மத்தியஸ்தத்தில் "நீண்ட இரவு" பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்ததிலிருந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான பதட்டங்களை தீர்க்க உதவியதாக அவர் பலமுறை மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம், இரண்டு ஆசிய அண்டை நாடுகளுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, வர்த்தகத்தை நிறுத்திவிடுவதாக பிரதமர் மோடியை மிரட்டியதாக டிரம்ப் கூறினார். பிரதமர் மோடியுடனான தனது "ஐந்து மணி நேர" பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டியதாக ட்ரம்ப் மேலும் கூறினார்.

ஆனால், பாகிஸ்தான் ராணும், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு, போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்ட பிறகே தாக்குதலை நிறுத்தியதாக இந்தியா கூறி வருகிறது.

மறுபுறம், பாகிஸ்தான் ஆரம்பத்தில் ட்ரம்ப்பின் கூற்றை மறுத்தாலும், பின்னர் அதை ஏற்றுக்கொண்டது. மேலும், "சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடியின் போது, அவரது தீர்க்கமான ராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமையை அங்கீகரிப்பதற்காக" 2026-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை  பாகிஸ்தான் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget