திணறிய போலீஸ்.. கடத்தல் கும்பல் தலைவனை தேடி கவ்விய மோப்ப நாய்!
பிடிபடாமல் இருந்த, பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனான ரஃபேல் கேரோ குயிண்டெரோவை மோப்பநாய் கண்டுபிடித்துள்ளது.
பிடிபடாமல் இருந்த, பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனான ரஃபேல் கேரோ குயிண்டெரோவை மோப்பநாய் கண்டுபிடித்துள்ளது.
தலைவனை கண்டுபிடித்த நாய்:
பிரபல போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான ரஃபேல் கேரோ குயிண்டெரோ, அமெரிக்க போதைப்பொருள் அமலாக்கத்துறையைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவரை கொலை செய்ததன் பின்னணியில் இருந்தவர் இவர்தான். மெக்ஸிகோ சிறைச்சாலையில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் சென்ற பிறகு மீண்டும் போதை கடத்தல் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவரை கண்டுபிடிக்க நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது தான் மேக்ஸ் என்ற சேர்ந்த மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது.
கடத்தல் கும்பல் தலைவன்:
குயிண்டெரோ இருந்த இடத்தை மெக்ஸிகோ கடற்படை மற்றும் அட்டர்ஜி ஜெனரல் அலுவலக அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைத்துத் தேடியது. ஆனால், குயிண்டெரோவை காணவில்லை. அப்போது மோப்ப நாயான மேக்ஸ் குயிண்டெரோ குப்பைக்குள் ஒளிந்திருந்ததை கண்டுபிடித்தது. சிஹுவாஹுவா மாகாணத்தின் வடக்கு எல்லையில் உள்ள சினலோவா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் குயிண்டெரோ பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நடைபெற்றட் தேடுதல் வேட்டையில் தான் சிக்கியுள்ளார். குயிண்டெரோ கைது செய்யப்பட்டிருப்பதை மெக்ஸிகோவின் தேசிய கைது ஆவணம் உறுதி செய்துள்ளது. இவர் மீது மேலும் இரண்டு கைது ஆணைகளும், தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள வேண்டுகோளும் கிடப்பில் உள்ளன.
தேடுதல் பட்டியலில் குயிண்டெரோ:
குயிண்டெரோ அமெரிக்காவின் எஃப்பிஐ-ன் தீவிரமாகத் தேடப்படுபவர் பட்டியலில் இருந்தவராவார். இவரை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 20 மில்லியன் டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்றும் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு துறை அறிவித்திருந்தது. எஃப்பிஐ-ஆல் தேடப்படும் குற்றவாளிகளின் டாப் 10 2018 பட்டியலில் ஒருவராக இருந்தார் குயிண்டெரோ.
SEMAR video of Rafael Caro Quintero being taken into custody by Mexican Marines today. pic.twitter.com/NjLslt6MJM
— Keegan Hamilton (@keegan_hamilton) July 15, 2022
ஹெலிகாப்டர் விபத்து:
இந்த தேடுதல் வேட்டையின்போது கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. 15 வீரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் லாஸ் மோசிஸ் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிர்ழந்துள்ளதாக கடற்படை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த தேடுதல் வேட்டையை முடித்துவிட்டு திரும்பிய பின் தரையிறங்கும்போது ஏற்பட்ட இந்த விபத்து ஏற்பட்டதாக அதிபர் அண்ட்ரெஸ் மேனுவேல் லோபஸ் ஒப்ரடார் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல்களைத் தெரிவித்துள்ள அதிபர் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகாலமாகத் தேடப்பட்டுவந்த போதை மருந்து கடந்த்தல் கும்பல் தலைவனை நாய் கண்டுபிடித்துள்ள செய்தி வைரலாகி வருகிறது.