Disease X: மிரட்ட வரும் புதிய வகை தொற்று...5 கோடி பேர் உயிர் போகுமாம்...வார்னிங் கொடுத்த வல்லுநர்கள்!
கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் திரும்புள்ள நிலையில், அடுத்து பெருந்தொற்று குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Disease X: கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் திரும்புள்ள நிலையில், அடுத்து பெருந்தொற்று குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புரட்டிப்போட்ட கொரோனா தொற்று
கொரோனா பெருந்தொற்று சீனாவின் ஊஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. இந்த கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. லட்சக்கணக்கான மக்களை இந்த கொரோனா நோய் தொற்று பலி வாங்கியது. இந்தியாவில் 3 அலைகளாக மிரட்டிய கொரோனா தொற்றால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.
முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும், அவ்வப்போது குரங்கு அம்மை, ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வந்தன. இந்நிலையில் தற்போது, கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் திரும்புள்ள நிலையில், அடுத்து வரும் பெருந்தொற்று குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் கொரோனா தொற்றா?
பிரிட்டனின் கொரோனா வேக்சின் டாஸ்க் போர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் என்பவர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகில் அடுத்து ஏற்படும் பாதிப்பால் 5 கோடி பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமானதாக இல்லை என்றும், தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதன் பாதிப்பே மிகவும் மோசமாக இருந்த நிலையில், இந்த புதிய நோய் தொற்றான ’Disease X’ அதைவிட மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிசீஸ் எக்ஸ்:
இந்த புதிய நோய் தொற்று கொரோனாவை விட ஏழு மடங்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் இந்த பெருந்தொற்று ஏற்கனவே நமக்கு மத்தியில் இருக்கும் வைரசில் இருந்து தோன்ற வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரித்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய ப்ளூ காய்ச்சலால் சுமார் 5 கோடி பேர் உயிரிழந்தனர். இந்த பாதிப்பு இணையாக இந்த புதிய தொற்று ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். அன்று ஏற்பட்டதை போல பாதிப்பு மோசமாக இருக்கும் என்று தெரிவித்தனர். ஏற்கனவே இருக்கும் பல வைரஸ்களில் ஒன்றில் இருந்து மோசமான தொற்று பரவும் அபாயம் உள்ளது. விலங்குகளிடம் இருந்த மனிதர்களுக்கு பரவும் நோய் பாதிப்புகளை வைத்து கொண்டு ’Disease X’ பாதிப்பிற்கான வேக்சின்களை உருவாக்கும் முயற்சியிலும் இங்கிலாந்து ஆய்வாளர்கள் தொடங்கி உள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வைரஸ் உருமாறக் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
Dalai Lama: ”சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டாம்; ஆனால்...” - திபெத் விவகாரத்தில் தலாய் லாமா கறார்!