மேலும் அறிய

திடீர் தொழில்நுட்ப கோளாறு... டெல்லியில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு... பயணிகளுக்கு என்னாச்சு..?

சமீப காலமாக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது மட்டும் இன்றி, விமான விபத்துகளும் தொடர்ந்து வருகிறது.

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அது ரஷியாவுக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, விமானம் மகதானில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 216 பயணிகள் பயணம் செய்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு:

பயணிகளுடன் விமான குழுவினர் 16 பேர், அந்த விமானத்தில் சென்றுள்ளனர். இதுகுறித்து விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தின் AI173 இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. 

216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் விமானம் திருப்பி விடப்பட்டு ரஷியாவில் உள்ள மகடன் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தரையிறக்கப்பட்ட விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்க்க மாற்று ஏற்பாடுகள் வழங்கப்படும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானம், கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

சமீப காலமாக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது மட்டும் இன்றி, விமான விபத்துகளும் தொடர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தொடர் கதையாகும் விமான விபத்துகள்:

அருணாச்சலப் பிரதேசத்தில் திராங் மலைப்பகுதியில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.

அதை தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் இரண்டு பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதேபோல, கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் 8ஆம் தேதி, நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட, 14 பேர், கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். குன்னுார் காட்டேரி அருகே நஞ்சப்பா சத்திரத்தில் நிலவிய கடும் மேகமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

செடிகள் சூழ்ந்த இடத்தில் பிபின் ராவத் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். மேலும் ராணுவப் பயிற்சி கல்லுாரி குரூப் கேப்டன் வருண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

இந்த கோர விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்., லிடர், லெப்., கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக், ஜித்தேந்திர குமார், நாயக் விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சட்பல் உட்பட, 13 பேர் இறந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu RoundUp: 10 மணி பரபரப்பு! தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள்!
Tamilnadu RoundUp: 10 மணி பரபரப்பு! தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள்!
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்Harini Amarasuriya Profile : தேயிலை தொழிலாளியின் மகள்!இலங்கையை அலறவிட்ட சிங்கப்பெண்!யார் இந்த ஹரிணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu RoundUp: 10 மணி பரபரப்பு! தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள்!
Tamilnadu RoundUp: 10 மணி பரபரப்பு! தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள்!
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
Breaking News LIVE 19th Nov 2024: நாகை, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, தஞ்சை நிலவரம் என்ன?
Breaking News LIVE 19th Nov 2024: நாகை, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, தஞ்சை நிலவரம் என்ன?
Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?
Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Embed widget