மேலும் அறிய

உளவு கப்பல் விவகாரம்..! இந்தியாவின் கோரிக்கையை கிடப்பில்போட்ட இலங்கை!? நினைத்ததை முடித்த சீனா!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை இலங்கை அரசின் உயர் மட்ட அலுவலர்கள் சனிக்கிழமை அன்று உறுதி செய்துள்ளனர். சீன ஆராய்ச்சி கப்பலால் இந்தியாவின் ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையிலும், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யுவான் வாங் 5 என்ற அந்த கப்பல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனக்கூறப்படும் நிலையில், உளவு பார்க்கவும் அந்த கப்பல் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாலும் இலங்கையில் செல்வாக்கு செலுத்துவதையும் இந்தியா சந்தேக கண்களிலேயே பார்த்து வருகிறது.

யுவான் வாங் 5 கப்பல், முதலில் ஆகஸ்ட் 11 அன்று இலங்கையில் சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவிருந்தது. பின்னர், இந்தியா கவலை தெரிவித்ததையடுத்து, கப்பல் வருகையை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனாவிற்கு இலங்கை கோரிக்கை விடுத்தது.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியா கவலை தெரிவித்த போதிலும், கப்பலை ஏன் நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்பது குறித்து திருப்திகரமான பதிலை அளிக்க இந்திய தரப்பு தவறிவிட்டதாக இலங்கை அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த விவகாரம் குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆகஸ்ட் 12, 2022 அன்று சீன தூதரகம் மூலம் அமைச்சகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் 16 ஆகஸ்ட் 2022 அன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டு, பொருள்களை நிரப்ப அனுமதி கோரி விண்ணப்பித்தது.

அனைத்து ஆவணங்களையும் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 13, 2022 அன்று, கப்பலுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சீன தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது" என விளக்கம் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் சீனக் கப்பல் அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகத்தை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்ததாக இலங்கை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 பில்லியன் டாலர்களுக்கு 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்கு இலங்கை குத்தகைக்கு வழங்கியுள்ளது. அதனைக் கட்டுவதற்கு சீன நிறுவனத்திற்கு இலங்கை 1.4 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புக்கு யுவான் வாங் 5 பயன்படுத்தப்படலாம் என்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பயன்பாடுகளை அக்கப்பல் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget