World's Richest Country: அமெரிக்காவை ஊதித்தள்ளிய சீனா.. உலக பணக்கார வரிசையில் முதலிடம்!
உலக பணக்கார நாடுகளின் வரிசையில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சீனா தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.
உலக பணக்கார நாடுகளின் வரிசையில் சீனா இப்போது முதலிடத்தில் உள்ளது, கடந்த 20 ஆண்டுகளில் சீன நாட்டின் உலக செல்வத்தின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னணியில் இருந்து அமெரிக்காவை முந்தி முதலிடத்தை பிடித்ததாக ப்ளூம்பெர்க்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மெக்கின்சே அண்ட் கோவில் பணிபுரியும் ஆலோசகர்களின் ஆராய்ச்சிப் பிரிவு ஒன்று உலகின் மொத்த வருமானத்தில் 60% உள்ளடக்கிய பத்து வெவ்வேறு நாடுகளின் இருப்புநிலைகளை சமீபத்தில் ஆய்வு செய்தது. அதன்படி, 2000 ஆம் ஆண்டில் முந்தைய நிகர மதிப்பான $156 டிரில்லியனாக இருந்தது.உலகின் நிகர மதிப்பு 2020 ம் ஆண்டுக்கு பின்பு $514 டிரில்லியனாக உயர்ந்தது. இதில், மிகப்பெரிய ஒற்றைப் பங்கை சீனா பெற்றுள்ளதாகவும், இது உலகின் வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சூரிச்சில் உள்ள மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட்டில் பங்குதாரரான ஜான் மிஷ்கே அளித்த பேட்டியில், நாங்கள் முன்பு இருந்ததை விட இப்போது பணக்காரர்களாக இருக்கிறோம். சீனாவின் செல்வம் 2000 ம் ஆண்டில் அதன் முந்தைய $7 டிரில்லியனில் இருந்து, $120 டிரில்லியனாக மாற்றம் பெற்றுள்ளது. சீனா உலக வர்த்தக அமைப்பில் சேருவதற்கு முன்பில் இருந்து சொல்ல முடியாத மிகப்பெரிய வளர்ச்சியையும், அதன் வேகத்தையும் பெற்று வருகிறது என்றார்.
அதேபோல், அமெரிக்காவும் சொத்து விலைகளில் அடிப்படையில் நிகர மதிப்பை $90 டிரில்லியனாக இருமடங்கு அதிகரித்துள்ளது. சீனாவும் அமெரிக்காவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் தான். ஆனால் உலகின் செல்வத்தின் பணக்கார குடும்பங்களின் அடிப்படையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவின் வருவாயுடன் ஒப்பிடுகையில், சொத்து விலைகள் அவற்றின் நீண்ட கால சராசரியை விட ஏறக்குறைய 50% அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் அது முடிவு செய்தது. மேலும் இது செல்வத்தின் நவீன ஏற்றத்தின் நிலைத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சிலரை வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மெக்கின்சே அண்ட் கோ பணியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியை அர்த்தமுள்ள வகையில் விரிவுபடுத்தும் திறன் கொண்ட அதிக உற்பத்தி முதலீடுகளை உலக செல்வமயமாதல் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால், மோசமான நிலை ஏற்பட்டால், சொத்து விலைகள் வீழ்ச்சியடையக்கூடும் என்றும், இதனால் உலகச் செல்வத்தின் மூன்றில் ஒரு பங்கு வரை உலக வருமானத்திற்கு ஏற்றவாறு அடிமட்டக் கோடு வீழ்ச்சியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்