மேலும் அறிய

"வீட்டை விட்டு வெளியே வர முடியாது…", டச்சு இளவரசி அமாலியாவுக்கு பலத்த பாதுகாப்பு… ஏன்?

"அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது" என்று ராணி மாக்சிமா தனது கணவர் கிங் வில்லெம்-அலெக்சாண்டருடன் ஸ்வீடனுக்கு அரசுமுறைப் பயணத்தின் போது கூறியதாக ANP மேற்கோளிட்டுள்ளது.

நெதர்லாந்து பட்டத்து இளவரசி கத்தரினா-அமாலியாவுக்கு தேச விரோத சக்திகளால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக நெதர்லாந்து செய்தி நிறுவனம் ANP வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இளவரசிக்கு கடுமையான பாதுகாப்பு

"அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது" என்று ராணி மாக்சிமா தனது கணவர் கிங் வில்லெம்-அலெக்சாண்டருடன் ஸ்வீடனுக்கு அரசுமுறைப் பயணத்தின் போது கூறியதாக ANP மேற்கோளிட்டுள்ளது. டச்சு சிம்மாசனத்தின் வாரிசு 18 வயதான அமலியா, கடந்த மாதம் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடங்கினார். அதற்காக ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார். ஆனால் அவரது பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக அவரை ஹேக் நகரில் உள்ள ஹுயிஸ் டென் போஷ் அரச அரண்மனைக்குத் திரும்பி வரும்படி கட்டாயப்படுத்தியதாக அரச தம்பதியினர் தெரிவித்தனர். 

கிரிமினல் கும்பலால் கடத்தப்படும் அச்சம்

கடந்த மாதம், பல டச்சு ஊடகங்கள், இளவரசி, என்ற முறைப்படி, கிரிமினல் கும்பல் அவரைக் கடத்தக்கூடும் என்றோ, தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவோ, அதிகப் பாதுகாப்பில் இருப்பதாகத் தெரிவித்தன. இவரை கடத்தி அரசவையை பயமுறுத்தும் நோக்கமோ, அவரை தாக்கும் நோக்கமோ நாட்டின் எதிரிகளுக்கு இருப்பதாக டட்ச் அரசு கருதுகிறது.

தொடர்புடைய செய்திகள்: Student Murder in Thomas Mount : ”இப்படித்தான் திட்டமிட்டு கொலை செய்தேன்” : மாணவி படுகொலை.. கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்...

அச்சுறுத்தலுக்கு காரணம் யார்

இந்த நிலையில் இந்த அச்சுறுத்தலுக்கு காரணம் யார் என்று இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கான பாதுகாப்புக்கு எந்த அளவில் உள்ளன என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை. ராயல் ஹவுஸைச் சுற்றியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வெளியில் கூற நெதர்லாந்து காவல்துறை மற்றும் நாட்டின் ரகசிய சேவை மறுத்துவிட்டன. வியாழன் மாலை நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அச்சுறுத்தல்கள் எங்கிருந்து வந்தது என்கிற விவரங்களைக் குறிப்பிட முடியாது என்று கூறினார்.

சாதாரண மாணவரின் வாழ்க்கை இல்லை 

இளவரசி அமாலியா கடந்த மாதம் தனது அரசியல் மற்றும் பொருளாதாரப் பட்டப்படிப்பை ஆம்ஸ்டர்டாமில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் வீடு திரும்புவதற்கு முன்பு ஆம்ஸ்டர்டாமிலேயே, தன்னோடு படிக்கும் பல மாணவர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அரண்மனையில் இருந்து இதுகுறித்து மாக்சிமா பேசுகையில், "முதலில் இது அவருக்கு ஒரு பயங்கரமான செய்தி, சம்பந்தப்பட்ட அனைவரும் அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். இதன் விளைவுகள் அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும். மற்றவர்களையோ போல அவரால் சாதாரண மாணவர் வாழ்கையை வாழ முடியாது", என்று கூறியதாக ANP மேற்கோளிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget