Burger King cigarette: பர்கர் சிக்கனுக்கு நடுவே புகைத்து வைத்த பாதி சிகரெட்.. கடுப்பான வாடிக்கையாளர்!
பர்கர் கிங் சிக்கனில் புகைப்பிடித்த பாதி சிகரெட் இருந்ததை கண்டு தாய் மற்றும் மகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அமெரிக்க மாநிலமான மிசிசிப்பியில் உள்ள மெரிடியனில் உள்ள பர்கர் கிங்கில், 14 வயதான சிறுமி, சிக்கன் வாங்கியுள்ளார்.பின்னர் சிக்கனை பாதி சாப்பிட்ட சிறுமி, அதற்குள் பாதிக்கு மேல் புகைத்த சிகரெட் இருப்பதை கண்டறிந்தார்.
தாய் மற்றும் மகள் அதிர்ச்சி:
இது குறித்து சிறுமியின் தாயார் ஜென்னி தெரிவித்துள்ளவதாவது, எனது மகள் சாப்பிடுவதற்காக, பர்கர் கிங்கில் சிக்கன் மீல் வாங்கி வந்தார். அதை நானும், அவளும் வீட்டிற்கு செல்லும் வழியில் சாப்பிட்டு கொண்டே வந்தோம். அப்போழுதே, சிக்கனில் சிகரெட் வாசனை வந்ததாக என் மகள் கூறினாள், நான் அதை நம்பவில்லை. ஏதோ விளையாட்டாக் கூறுகிறாள் என்று நினைத்தேன். ஆறு சிக்கன் சாப்பிட்டு முடித்து பின் தான் தெரிந்தது, அதற்குள் பாதி பிடிக்கப்பட்ட சிகரெட் இருந்தது. அதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்து விட்டோம்.
புகார்:
உடனே பர்கர் கிங் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஜென் புகாரளித்தார். சிறிது நேரம் கழித்து , அவரை தொடர்பு தொடர்பு கொண்ட மேலாளர், அதற்கான முழு பணத்தை திருப்பி தருவதாக, தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய ஜென், நான் அடிக்கடி ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது வழக்கம். சில சமயங்களில் முடி இருக்கும், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் முதல் முறையாக பாதி புகைப்பிடித்த சிகரெட் இருப்பது இதுவே முதல் முறை.
என் மகளும் சிகரெட் புகைப்பால், ஆனால் அது வேற பிராண்ட். சிக்கனில் இருந்தது வேற பிராண்ட் சிகரெட். வேறு ஒருவர் புகைத்த சிகரெட் , சிக்கனில் இருந்தது, என் மகளை மிகவும் எரிச்சலாக்கியதுள்ளாகவும் என அவர் தெரிவித்துள்ளார்.
பர்கர் கிங் தெரிவிப்பு:
சம்பவம் குறித்து பர்கர் கிங் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பர்கர் கிங் நிறுவனம் விருந்தினர்களுக்கு ஒரு சுவையான, நன்கு தயாரிக்கப்பட்ட உணவை நியாயமான விலையில் வழங்கி வருகிறது.இந்த சம்பவம் குறித்து அறிய, நாங்கள் உரிமையாளர்களை அணுகியுள்ளோம், மேலும் இந்த சிக்கலை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுப்போம்.
Watch Video: வெயில் காரணமா? 17ஆவது மாடியில் மளமளவென பரவிய தீ.. பதைபதைக்கும் வீடியோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்