Sri Lanka Crisis: இலங்கை கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக AFP தகவல்!
பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து இலங்கையில் நடந்த கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து இலங்கையில் நடந்த கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக AFP தகவல் தெரிவித்துள்ளது . ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற வாகனத்தை மறித்து போரட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ராஜபக்சே ஆதரவாளர்கள் மற்றும் போரட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக AFP தகவல் தெரிவித்து வருகிறது.
#BREAKING Ruling-party MP killed in Sri Lanka clashes: police pic.twitter.com/Ri6umuPWiX
— AFP News Agency (@AFP) May 9, 2022
இலங்கையில் நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எம்.பி அமரகீர்த்தி அதுகோரலாவின் காரை வழிமறித்துள்ளனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி காரில் இருந்து இலங்கை எம்.பி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் மூன்று காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியது. இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எம்.பி மற்றும் அவருடன் இருந்த ஆதரவாளர்களை தாக்கியுள்ளனர்.
இந்த தொடர் தாக்குதலால் இலங்கை எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக இலங்கை போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்