சூட்கேஸுக்குள் பன்றிகளின் உடல்களை அடைத்த ஆராய்ச்சியாளர்கள்.. எதனால் தெரியுமா..?
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றி கிட்டத்தட்ட 70 இறந்த பன்றி உடல்களை அழுகுவதற்கு விஞ்ஞானிகள் சூட்கேஸ்களில் அடைத்து விட்டுச்சென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா: மேற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றி கிட்டத்தட்ட 70 இறந்த பன்றி உடல்களை அழுகுவதற்கு விஞ்ஞானிகள் சூட்கேஸ்களில் அடைத்து விட்டுச்சென்றுள்ளனர். இதன் மூலம், தீவிர சூழ்நிலைகளில் உடலின் சிதைவு செயல்முறையைப் புரிந்துகொள்வதற்கும், கொலைச் சம்பவங்களை குற்றவியல் புலனாய்வாளர்கள் மறுகட்டமைக்க உதவுவதற்கும் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூட்கேஸின் உள்ளேயும் வெளியேயும் இறந்த விலங்குகளை எந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் மாற்றுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அளவிடப்படுகிறது. மேலும், நுண்ணுயிரியல் மாற்றங்களுடன் எலும்புகள் மற்றும் உடலின் இரசாயன மாற்றங்களும் கவனிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்த பன்றியின் உடல்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்ட காரணம்..?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மனித உடல்கள் கொலை செய்யப்பட்டு அந்த கொலையை மறைக்க கொலையாளிகள் சூட்கேஸ்கள், வீலி பின்கள் (குப்பை தொட்டி), கார் பூட்ஸ், ஃப்ரிட்ஜ்கள் போன்ற இறுக்கமான பொருட்களில் வைக்கப்படுகின்றனர். இதன்மூலம், கொலைகாரர்கள் உடலை மறைத்து தங்கள் தடங்களை மறைக்க இந்த முறைகளைப் பயன்படுத்தியதற்கு பல ஆதாரங்கள் அவ்வபோது வெளிவருகிறது.
MU’s resident bug whisperer @doc_magni has provided a fascinating look inside suitcases used to hide murder victims, and the role played by the insects trapped within.
— Murdoch University (@MurdochUni) August 31, 2022
Read about her first-of-its kind experiment in @ConversationEDU ➡️ https://t.co/U93ZD7g1x4#forensics #CSI pic.twitter.com/dgAmeFElHe
இதுகுறித்து முர்டோக் பல்கலைக்கழகத்தின் மூத்த தடய அறிவியல் விரிவுரையாளரான பாவ்லா மாக்னி தெரிவிக்கையில், "குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கொலை செய்தவர்களை ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்துக்கு எடுத்து செல்ல முயற்சி செய்கின்றனர். இதற்கு அவர்கள் அதிகம் பயன்படுத்துவது சூட்கேஸ் மற்றும் தள்ளும் குப்பைத்தொட்டிகள்தான். இதன் ஆராய்ச்சி மூலம் கொலையாளிகளின் அடையாளம் மற்றும் தடயங்கள் கிடைக்கிறதா என்று முயற்சிக்கிறோம்.
கடந்த ஆண்டு பெர்த் அருகே உள்ள அணையில் வீசப்பட்ட குப்பை சக்கரத் தொட்டியில் ஒரு மனிதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது, அதேபோல், சில வாரங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் இரண்டு சூட்கேஸ்களில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை ஆராய்ச்சி மிகவும் தேவை என்பது இது உறுதிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
சூட்கேஸ்கள் போன்ற இறுக்கமான மூடப்பட்ட பொருட்களுக்குள் இறந்த உடலின் சிதைவு செயல்முறை பாதிக்கிறது. குறிப்பாக பூச்சிகள் உடலை அணுகும் தன்மையை தடை செய்து, சிதைவு தன்மையை குறைக்கிறது. இதன்மூலம், சிதைவு செயல்முறையின் இந்த மாற்றம், தடயவியல் நோயியல் நிபுணர் மற்றும் தடயவியல் பூச்சியியல் வல்லுநர்களின் இறந்த உடலின் மரணத்திலிருந்து நேரத்தை அளவீடு செய்யும் திறனை பாதிக்கிறது.
ஒரு தடயவியல் நோயியல் நிபுணருக்கு மரணத்திலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு குறுகிய சாளரம் உள்ளது, அதே சமயம் பூச்சிகள் இருக்கும் மற்றும் நாட்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளுக்கு தகவல்களை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.