'எல்லாத்துக்கும் மன்னிச்சுக்கோ..' விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய கணவன்
விபத்தில் சிக்குவதற்கு முன்பு ஒருவர் அனுப்பிய கடைசி மெசேஜ் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.
!['எல்லாத்துக்கும் மன்னிச்சுக்கோ..' விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய கணவன் America plane crash victim sent I love you text moments before disaster 'எல்லாத்துக்கும் மன்னிச்சுக்கோ..' விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய கணவன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/21/a2e4022b94bed628cb5692fa7555c3581674289850838224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமெரிக்கா வெஸ்ட்செஸ்டர் கவுண்டியில் ஒரு சிறிய விமானம் நேற்று முன் தினம் விபத்தில் சிக்கியது. இதில், விமானத்தை இயக்கிய விமானி, பயணி என இருவர் உயிரிழந்தனர். இவர்கள், கிளீவ்லேண்டை சேர்ந்தவர்கள். இவர்கள் இறுதி சடங்கிற்காக சென்றுவிட்டு வீடு திரும்பியவர். அதில் ஒருவர் அனுப்பிய கடைசி மெசேஜ் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இறந்த விமானியின் பெயர் போருச் டாப் என அடையாளம் காணப்பட்டது.
நெகிழ்ச்சி மெசேஜ்:
அதேபோல, அந்த நெகிழ்ச்சியான மெசேஜை அனுப்பியவர் பெஞ்சமின் சாஃபெட்ஸ் என்ற பயணி. மாலை 5:27 மணிக்கு இவர் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. தனது மனைவிக்கு அவர் அனுப்பிய மெசேஜில், "நான் உன்னையும் குழந்தைகளையும் நேசிக்கிறேன். நான் செய்த அனைத்திற்கும் வருந்துகிறேன். எஞ்சின்கள் செயல் இழந்துவிட்டது. கடவுளை போற்றுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு என்ஜினை கொண்டு இயக்கப்படும் பீச்கிராஃப்ட் A36 விமானம்தான் விபத்தில் சிக்கியுள்ளது. அந்த விமானம், JFK விமான நிலையத்தில் இருந்து ஒஹியோவில் உள்ள குயஹோகா கவுண்டி விமான நிலையம் வரை சென்றுள்ளது. அந்த சமயத்தில்தான், மாலை 6:15 மணி அளவில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய விமானம்:
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் எலிசபெத் இஷாம் கோரி கூறுகையில், "ஜேஎஃப்கே விமான நிலையத்திற்கு வடக்கே 40 மைல் தொலைவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் விமானம் இருந்தபோது, எண்ணெயின் அழுத்தம் குறைவாக இருப்பதாக விமானி தெரிவித்தார்.
வெள்ளை சமவெளி விமான நிலையத்தை நெருங்கி வருவதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் ரேடியோ மூலம் தகவல் கூறியுள்ளார். ஆனால், பின்னர் எந்த தகவலும் அவரிடம் இருந்து வரவில்லை" என்றார்.
வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள வடக்கு கோட்டை நகரத்தில் உள்ள ஒரு குக்கிராமமான அர்மோங்கில் உள்ள அலுவலகப் பூங்காவிற்குப் பின்னால் உள்ள காடுகளில் விபத்தில் சிக்கிய விமானங்கலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
Victim of Westchester plane crash sent 'I love you' text moments before disaster https://t.co/0t3l1TjH1k pic.twitter.com/m8nXr5p3Zr
— New York Post Metro (@nypmetro) January 20, 2023
இருவரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மீண்டும் கிளீவ்லேண்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். ஓஹியோவின் பீச்வுட்டில் மனைவி ஸ்மடார் மற்றும் ஏழு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் சாஃபெட்ஸ். இவரின் கடைசி மெசேஜ் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. விபத்தில் சிக்குவதற்கு முன்பு மனைவியிடம் அவர் மன்னிப்பு கேட்ட விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)