Kim Jong-un: ‘உனக்கு அவ்வளவு தைரியமா’ .. அதிபர் கிம் பற்றி இன்டர்நெட்டில் தேடிய நபருக்கு மரண தண்டனை விதிப்பு..!
வடகொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் குறித்து இணையத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் குறித்து இணையத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிபராக இருந்த கிம் ஜோங்-2 வின் மறைவுக்குப் பிறகு வடகொரிய அதிபராக அவரது மகன கிம் ஜாங் உன் பதவியேற்றார். உலகின் மர்மதேசமாக அறியப்படும் வடகொரியாவில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாம் அவ்வளவு எளிதில் வெளியுலகிற்கு தெரியாது. அந்த அளவுக்கு அதிபர் கிம் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். திடீரென அணு ஆயுத சோதனை நடத்துவது, கண்டம் விட்டு கண்டம் ஏவுகணை விடுவது என அவரது அட்ராசிட்டி எதிர் நாடுகளையும் ஆட்டம் கொள்ள வைக்கும்.
அந்நாட்டு மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள். அதேசமயம் தவறு செய்தால் கொடூரமான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கிம்மின் சர்வாதிகார போக்கை கண்டிக்கும் வகையில் சர்வதேச நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் அந்நாட்டில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சிகை அலங்காரம் தொடங்கி மது குடிப்பது வரை எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் விட தன் மகளின் பெயரை ஜூ ஏ பெயரை நாட்டில் யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது என சமீபத்தில் உத்தரவிட்டு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதெல்லாம் பார்க்கும் போது கிம் செய்வது ரொம்ப ஓவர் என உலக மக்களே கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தன்னைப் பற்றி இணையத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கிம் உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்காணித்து அதிபரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. உடனடியாக கிம் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு படைப்பிரிவினரால் இந்த தண்டைனையானது நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உலக நாடுகளின் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.