Israel - Hamas War: முடிவுக்கு வந்த தற்காலிக போர் நிறுத்தம்! காசாவில் மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் - ஹமாஸ் வார்!
6 நாட்கள் இஸ்ரேல் - ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை முதல் மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே சுமார் 7 வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் காசாவில் சுமார் 12,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் - ஹமாஸ்:
மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்தனர்.
மேலும் ஹமாஸ் அமைப்பினர் 240 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை பணயக்கைதிகளாக அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் 4 நாட்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 4 நாட்களில் ஹமாஸ் தரப்பில் பணயக்கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க ஒப்புதல் அளித்தது. அதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மீண்டும் தொடங்கிய போர்:
4 நாட்கள் போர் நிறுத்தம் இரு தரப்பினராலும் முறையே கடைபிடிக்கப்பட்டதால் மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டது. அதன்படி கடந்த 6 நாட்கள் போர் நிறுத்தத்தின் பயணாக ஹமாஸ் தரப்பில் 105 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 81 பேர் இஸ்ரேலியர்கள், 23 பேர் தாய்லாந்தை சேர்ந்தவர் மற்றும் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர். அதே சமயம் மேலும் 137 பேர் ஹமாஸ் தரப்பினரிடம் பணயக் கைதிகளாக உள்ளனர். இதனிடையே தற்காலிக போர் நிறுத்தம் இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தரப்பில் போர் நிறுத்தத்தை நீடிக்க இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பதற்றம்:
தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் மீண்டும் காசாமுனையில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் இருக்கும் ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது.
Hamas violated the operational pause, and in addition, fired toward Israeli territory.
— Israel Defense Forces (@IDF) December 1, 2023
The IDF has resumed combat against the Hamas terrorist organization in Gaza. pic.twitter.com/gVRpctD79R
ஆனால் போர் நிறுத்தம் விதிமுறையை ஹமாஸ் குழுவினர் முறையாக பின்பற்றவில்லை என்றும், எல்லையில் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நட்த்தியதால் மீண்டும் இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். மேலும், காசாவில் இஸ்ரேல் படையினர் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் குழுவினர் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பதற்றம் நீடித்து வருகிறது.