தேடப்படும் பயங்கரவாதிக்கு உள்துறை அமைச்சர் பதவி.. பரபரக்கும் தலிபான்களின் புதிய அரசு
ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாராண சூழ்நிலையால் அங்குள்ள மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான்கள் இஸ்லாமிய போராளிகள் குழுவின் நிறுவனரை முதல்வராகவும், அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் உள்ளவரை உள்துறை அமைச்சகராகவும் நியமித்தது அமெரிக்களுக்கிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ராணுவத்தை வெளியேற்றிய நிலையில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தலிபான்கள் தங்களது ஆட்சியை அமைப்பதற்காக பல்வேறு அடக்கு முறைகளையும், வன்முறைகளையும் கையாளத் தொடங்கினர். கடந்த 15 ஆம் தேதி முதல் உள்நாட்டுப்போரில் ஈடுபட்ட தலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூல் உட்பட கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாராண சூழ்நிலையால் அங்குள்ள மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்த சூழலில் தான் படிப்படியாக ஆப்கானிஸ்தானை தங்கள் வசம் ஆக்கிக்கொண்ட தலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டதோடு,யார் யார் முக்கிய பதவி வகிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இதன்படி, அமெரிக்க பயங்கார வாத பட்டியலில் இடம் பெற்றுள்ள சிராஜுதீன் ஹக்கானி என்பவர் ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். இதேப்போல் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சராக மவுலவி அமிர்கான் முத்தாகி செயல்படுவார் என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதோடு பிரதமராக முல்லா முகமது ஹாசன் மற்றும் துணை பிரதமராக முல்லா பராதர் செயல்படுவதாகவும் அறிவிப்பைத் தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் தலிபான்கள் வெளியிட்டுள்ள புதிய அமைச்சரவைப்பார்க்கும் போது, மீண்டும் 1996-2001 காலக்கட்டத்தில் இருந்த ஆப்கானிஸ்தானின் வாழ்க்கையை தான் மக்கள் வாழ நேரிடும் எனவும், மீண்டும் மக்கள் மீதான அடக்கு முறைக்கு தலிபான்கள் தயாராகிவிட்டதாக அமெரிக்க செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதோடு புதிய அமைச்சரவையில் பெண்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்பது கவலையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தலிபான்கள் இச்செயல்களை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது எனவும் கூறியுள்ளார். பெண்களுக்கு எதிராக அடக்கு முறைகள் மேலொங்கியதன் காரணமாகத் தான் பெண்கள் தலிபான்கள்களுக்கு எதிராகப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தற்போது புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இதுக்குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் முஜாஹித் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான் மக்களின் முதன்மைத்தேவைகளை நிறைவேறுவதற்காகவே இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டதாகவும், இதில் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு அமைச்சரவை நிரப்பப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையில் தான், ஆப்கானிஸ்தானின் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்துவருகின்றனர். எனவே வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி ஜெனீவாவில் நன்கொடை மாநாடு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேற்கத்திய நாடுகள் உதவி செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.