Yoga Day : சர்வதேச யோகா தினம் : அபுதாபியிலும் களைகட்டிய யோகாமயம்.. ஹெலிபேடில் ஒரு யோகா ட்ரீட்
இந்த நிகழ்வின் ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.
சர்வதேச யோகா தின 2022 கொண்டாட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் ஸ்ட்ராபெரி சூப்பர்மூனின் கீழ் ஹெலிபேட்டில் யோகாவுடன் தொடங்கியது.இந்த நிகழ்வின் ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. புர்ஜீல் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் ஹெலிபேடில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா அமர்வில் அபுதாபியில் இருந்து மொத்தம் 45 மக்கள் கலந்துகொண்டதாக கல்ஃப் நியூஸ் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
ஜூன் 21 அன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு நிறுவனமான VPS ஹெல்த்கேர், யோகாவுக்காக ஏற்பாடு செய்திருந்த யோகா பட்டறைகள் தொடரின் ஒரு பகுதியாக இந்த ஒரு வகையான அமர்வு அமைந்தது.
"இந்த நிகழ்வை இரவில் நடத்த நாங்கள் திட்டமிட்டோம், இது ஒரு அரிய வாய்ப்பாகும், இது மக்கள் யோகாவை வித்தியாசமான கோணத்தில் செய்து பார்க்க உதவும். இது ஒரு உற்சாகமான அமர்வாக மாறியது, இந்த நிகழ்வு பங்கேற்பாளர்கள் புத்துணர்ச்சியுடன் உணர உதவியது, ”என்று பர்ஜீல் மருத்துவமனையின் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சுனில் கூறினார்.
ஹெலிபேட் யோகா அமர்வின் ஒரு பகுதியாக இருந்த இந்திய வம்சாவளியினர் அர்ச்சனா குப்தா, இந்த அனுபவம் ஒரு இனிமையான அனுபவமாக இருந்ததாகக் கூறினார்.
"அமர்வின் போது ஸ்ட்ராபெரி நிலவு மேகங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டதால் நான் சற்று ஏமாற்றமடைந்தாலும், இரவில் இந்த நிகழ்வில் பங்கேற்க முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது," என்று அவர் கூறினார்.
VPS ஹெல்த்கேர் அபுதாபி, அல் ஐன், துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள அதன் பிற நிறுவனங்கள் முழுவதும் பொதுமக்களுக்காக இந்த யோகா நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. எமிரேட்ஸ் முழுவதும் இருந்து 2000 பேர் வரைக் கலந்துகொள்ளச் செய்வதே இந்த நிகழ்வு அமைப்பாளர்களின் நோக்கம். இதன் மற்றொரு அம்சமாக VPS ஹெல்த்கேர் மற்றும் பர்ஜீல் மருத்துவமனை, இந்திய தூதரகம் மற்றும் அபுதாபி விளையாட்டு கவுன்சிலுடன் இணைந்து அபுதாபி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வெகுஜன யோகா நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்ய உள்ளது.