சம்பளத்தோட ஒரு வருட லீவு...! லக்கி ஆஃபரை அதிரடியாக வென்ற ஊழியர்..! என்னப்பா சொல்றீங்க..?
சீனாவில் ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியருக்கு 365 நாட்கள் விடுமுறை அளித்து ஊதியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்டா மாகாணத்தில் ஷென்ஜென் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, கொரோனா பெருந்தொற்று பரவலை அடுத்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது பணியாளர்களுக்கு இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உற்சாகமடையும் வகையில் இந்நிகழ்வில் லக்கி டிரா போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும் என்றும், தோல்வியுற்றால், உணவு சப்ளை செய்யும் வெயிட்டர் வேலை செய்ய வேண்டும் உள்ளிட்டவை விளையாட்டில் இடம் பெற்றிருந்தது. இப்போட்டியில் பலர் துணிச்சலுடன் பங்கேற்றனர்.
இந்த விளையாட்டில் பங்கேற்ற பணியாளர் ஒருவர் வெற்றி பெற்றார். ஆச்சரியப்படும் வகையில் அவருக்கு அவரது நிறுவனம் சம்பளமும் கொடுத்து, 365 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும் என்ற ஆச்சரிய ஆஃபரை வழங்கியது. இது தொடர்பான வீடியோ சீன சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் பரிசை வென்ற நபர் தனக்கு கிடைத்த பரிசு உண்மைதானா? என கேட்டு தெளிவுபடுத்தி கொள்கிறார். இப்படிப்பட்ட ஒரு பரிசை தனது ஊழியர் வென்றதை அறிந்த அந்நிறுவன முதலாளி திகைப்புக்குள்ளானார்.
இதுதொடர்பாக அந்நிறுவன பெண் பணியாளர் ஒருவர் கூறும்போது, பரிசை வென்ற நபரிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அந்நபர் தனக்கு கிடைத்த பரிசுக்கான பணத்தை பெற்று கொள்ள விரும்புகிறாரா? அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அனுபவிக்க விரும்புகிறாரா? என்பது குறித்து கேட்டு முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த பலரும் 'அட..! இது நல்ல நிறுவனமா இருக்கே?' என சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
எதிர்பார்ப்பு:
மேலும் ஒரு சிலர் இந்த பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ள அந்த நபருக்கு தைரியம் உள்ளதா? என கேள்வி எழுப்புவதுடன், சம்பளத்துடன் கூடிய ஒரு வருட விடுப்பை முடித்து விட்டு அந்நபர் பணிக்கு திரும்பும் போது, அவரின் இடத்தில் வேறொருவர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தலாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்பார்க்காமல் கிடைத்த ஆச்சர்யமான பரிசை அந்த ஊழியர் அனுபவிப்பாரா இல்லை? பரிசுக்கான பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வழக்கம்போல் வேலைக்கு செல்வாரா? என அறிய சமூக வலைதளவாசிகள் பலரும் ஆவலடன் காத்துக் கிடக்கின்றனர்.
மேலும் படிக்க,
மேலும் படிக்க,
Texas Farm Fire: டெக்சாஸில் ஏற்பட்ட பண்ணை தீ விபத்து.. 18,000 பசுக்கள் உயிரிழப்பு..