US Car Pileup Crash: அமெரிக்காவில் நடந்த கோர விபத்து.. 158 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி 7 பேர் உயிரிழப்பு..
அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் நிலவிய கடும் பனிப்பொழிவால் 158 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் நிலவிய கடும் பனிப்பொழிவால் 158 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Superfog' in Louisiana blamed for highway crashes that killed at least 7 people.
— Chaudhary Parvez (@ChaudharyParvez) October 24, 2023
Massive car crashes involving a total of 158 vehicles#Louisiana #Crash #Manchac pic.twitter.com/zoeqfbC22f
அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய சதுப்பு நிலம் இருக்கிறது. அங்கு ஏற்பட்ட தீ விபத்து மளமளவென பற்றி எரிந்தது. இதில் சதுப்பு நில பகுதிகள் மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் பகுதியும் தீ விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டத்தால் சூழப்பட்டது. அதுமட்டுமின்றி குளிர் காலம் தொடங்கும் நிலையில் அங்கு கடும் பனிப்பொழிவும் நிலவியது. பனிப்பொழிவுடன் இந்த கரும்புகை சேர்ந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Breaking news.
— 💎💎💎 (@MilaRoyaleReal) October 24, 2023
October 23, 2023.
Louisiana.
Cars scattered across the interstate in the aftermath of a major pileup on I-55.
At least seven people were killed and 25 others hurt in a crash involving 158 vehicles on Interstate I-55.
Source: 🎥wafb9 pic.twitter.com/K0ORoN7cyf
வெளிநாடுகளில் பெரும்பாலான சாலைகள் ஒரு வழி சாலையாக இருக்கும். இதனால் அங்கு வாகனங்கள் இயல்பை விட வேகமாக தான் இயங்கும். இந்நிலையில் அந்த சாலையில் அபாயகரமான வேதிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு அந்த வழியாக ஒரு லாரி வந்தது. ஏற்கனவே அப்பகுதி முழுவதும் மூடுபனியால் முன்னே செல்லும் வாகனம் கூட தெரியாத அளவு கடுமையாக இருந்ததால் அந்த வழியாக வந்த லாரி முன்னே இருந்த கார் மீது மோதியது.
கார் மீது லாரி மோதியதில், லாரியில் இருந்த வேதிப் பொருடகள் கசிந்தது. இதனால் அப்பகுதி மேலும் புகை மூட்டத்துடன் காட்சியளித்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து வந்த 158 வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதியது. சங்கிலி தொடர் விபத்தால் அந்த சாலை முழுவதும் வாகனங்களில் குப்பை குவியல் போல் காட்சியளித்தது.
இந்த விபத்தை பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும் மீட்பு படையினரும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 63 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த கோர விபத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Vladimir Putin: ரஷ்ய அதிபர் புதினுக்கு உடல்நலக் குறைவா? ரஷிய அரசு பரபர தகவல்!
Train Accident: வங்கதேசத்தில் கோர விபத்து! அப்பளம்போல நொறுங்கிய பயணிகள் ரயில் - 15 பேர் மரணம்