ஆன்மாவை ஏலத்தில் விட்ட இளைஞர்... இது என்எஃப்டி சந்தையில் நிகழ்ந்த கூத்து!
பெரிய பெரிய சொத்துகளைதான் எல்லாரும் ஏலம் விடுவாங்க. ஆனால் இந்த இளைஞர் சற்றே வித்தியாசமானவர். 21 வயதான இந்த வெளிநாட்டு மாணவர், ஓப்பன் ஸீ என்ற என்எஃப்டி மார்க்கெட்டில் ஏலத்தில் விட்டுள்ளார்.
அந்த இளைஞரின் பெயர் ஸ்கைக். இவர் நெதர்லாந்தை சேர்ந்தவர். இவர் ஓபன் ஸீ மார்க்கெட்டில் சாயில் ஆஃப் ஸ்டினஸ் என்ற பெயரில் விற்பனை விளம்பரத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் அவர், "ஹலோ.. நீங்கள் ஏதும் ஆன்மாவை வாங்க விரும்புகிறீர்களா? எனது ஆன்மாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை வாங்கி நீங்கள் உங்களின் இஷ்ட தெய்வதுக்கு பகுதியாகவோ, அல்லது முழுமையாகவோ பலி கொடுக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார். கூடவே "sale of soul agreement" ஆன்மா விற்பனைக்கான ஒப்பந்த பத்திரம் என்றும் ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளார். இந்த ஏல அறிவிப்பு தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.
இதுவரை என்எஃப்டியில் ஏலத்தில் விடப்பட்டதிலேயே இந்த ஆன்மாவுக்கு தான் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதம. ஆ, 0.11 ETH எரித்தீயம் ($378) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்எஃப்டி பின்னணி...
டிஜிட்டல் சொத்துகளுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் என்எஃப்டி பற்றி புரிந்துகொள்வோம். இதன் பின்னணியில் இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம். பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்ஸி, என்எஃப்டி போன்றவை செயல்படுகிறது. பரிமாற்றம் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் வங்கிகள் போன்ற இடைத்தரக அமைப்புகளின் தேவையை பிளாக்செயின் தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடுகிறது. ஆனால், பிட்காயினைவிட என்எஃப்டி சற்றே வித்தியாசமானது.
ஒவ்வொரு என்எஃப்டிக்கும் ஒரு மதிப்பு. ஒரு பிட்காயினைக் கொடுத்து இன்னொரு பிட்காயின் வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால், ஒரு என்எஃப்டியைக் கொடுத்து இன்னொரு என்எஃப்டி வாங்க முடியாது. என்எஃப்டி முதன்முதலாக 2017-ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில் தான் அறிமுகமானது. அந்த ஆன்லைன் கேமில் வரும் பூனைகளை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இப்படித்தான் என்எஃப்டி நடைமுறைக்கு வந்தது. ஆன்லைன் பூனையில் ஆரம்பித்தது தற்போது ரியல் டைமில் ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து இருக்கிறது. தற்போது நிஜ உலகில் நிலம் வாங்குவது எல்லாம் பழைய கதையாக மாறிவிடும் அளவுக்கு மெய்நிகர் உலகில் (virtual reality) நிலம் வாங்கும் போக்கு ஆரம்பமாகி இருக்கிறது.
இதைத் தான் 21 வயது நிரம்பிய இந்த மாணவரும் செய்துள்ளார். என்எஃப்டி NFT (Nonfungible tokens) என்பது இப்போது ஹைப்பில் உள்ள டிஜிட்டல் ஆர்ட் மற்றும் மீம் மார்கெட். உலகமே கொரோனா பெருந்தொற்றில் சிக்கியிருந்த போது இந்த
என்எஃப்டியில் மட்டும் முதலீட்டாளர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். குட்டி குட்டி ஜிஃப், பாடல்கள், வீடியோக்கள், மீம்ஸ்கள் எனப் பலவும் இங்கு கல்லா கட்டின.
ஏன் நம்மூரில் ஜி.வி.பிரகாஷ் கூட இதைப் பின்பற்றினார். தனது பாடல்கள்தான் தன்னுடைய சொத்து என்று கூறிய அவர் பினான்ஸ் (binance) என்கிற ஆன்லைன் தளத்தில் தனது பாடல்களை ஏலம் விடுவதாக அறிவித்தார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக என்எஃப்டி முறையில் ஏலம் விட்டது முதல்முறை. 6 பாடல்களை அவர் ஏலம் விட்ட அவார். அதன் ஆரம்ப விலையாக 5 எரித்தீயம் என நிர்ணயித்திருந்தார். அதில் என்ன ஈட்டினார் அல்லது இழந்தார் என்பது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் இது இளைஞர்களின் கிரேஸாக உள்ளது என்பது மட்டும் உறுதி.