கொடூரம்.. மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 9 குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை..!
காங்கோவில் மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 9 குழந்தைகள் உள்பட 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கடற்படை வீரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![கொடூரம்.. மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 9 குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை..! 9 children among 13 killed after soldier opens fire at son's funeral in DR Congo கொடூரம்.. மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 9 குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/25/05c11cdb3f8b5b5902e4f8c4d2103c491690275986262102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்று காங்கோ. அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது இடூரி மாகாணம் ஆகும். இங்குள்ள ஆல்பர்ட் ஏரிக்கரை பகுதியில் நையேகாவா கிராமம் உள்ளது.
13 பேர் சுட்டுக்கொலை:
இந்த கிராமத்தில் அந்த நாட்டு கடற்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது மகன் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அவரது மகனின் இறுதிச்சடங்கு நடந்தது. அந்த இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவரின் தந்தையான கடற்படை வீரர், தன்னுடைய துப்பாக்கியால் தன்னைச் சுற்றியிருந்தவர்களை சரமசரியாக சுட்டார். அவர் சரமாரியாக திடீரென சுட ஆரம்பித்ததால் மக்கள் ஆங்காங்கே சிதறி ஓட ஆரம்பித்தனர். அவர் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் குழந்தைகள் ஆவார்.
தப்பியோடிய வீரர்:
இந்த சம்பவம் காங்கோ நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 பேரை சுட்டுக்கொன்ற பிறகு அந்த கடற்படை வீரர் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவலறிந்த அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மகனது இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த குழந்தைகள் உள்பட 13 பேரை கடற்படை வீரர் சுட்டுக்கொன்றது ஏன்? இதற்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனது இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்தவர்களை கடற்படை வீரரே சரமாரியாக சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் சோகத்தை அந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Afghanistan: ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை.. தொடரும் தலிபான்கள் அராஜகம்..!
மேலும் படிக்க: America: இந்தியா செய்த ஒரு காரியம்.. உலக நாடுகளை அச்சுறுத்தும் அரிசி தட்டுப்பாடு.. அமெரிக்காவும் பரிதவிப்பு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)