7 வயது சிறுமி கண்டுபிடித்த 7 சிறுகோள்கள்..! ஆச்சரியப்படுத்திய குட்டிப்பொண்ணு!
அறிவியல் திட்டத்தில் பங்கேற்று 7 சிறுகோள்களை கண்டுப்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிக்கோல் ஒலிவேரா எனும் 7 வயது சிறுமி, 7 சிறுகோள்களை கண்டுபிடித்து வானியல் அறிஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளார். இவர் தான் உலகத்தில் இளைய வானியலாளர் ஆவார் .
சர்வதேச வானியல் தேடல் ( International Astronomical Search Collaboration ) நடத்திய 'Asteroid Hunt' - சிறுகோள் தேடுதல் என்ற அறிவியல் திட்டத்தில் பங்கேற்று 7 சிறுகோள்களை கண்டுப்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் ஒரு பத்திரிகைக்கு அவரது தயார் அளித்த பெட்டியில், நிகோல் தனது 2 வயதில், நட்சத்திரத்தை கேட்டார். அப்போது நான் பொம்மை நட்சத்திரத்தை வாங்கி கொடுத்தேன். வளர வளர தான் இவளுக்கு வானியல் துறையில் ஆர்வம் இருப்பது கண்டுபிடித்து அவரை ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார்.
நிகோல் தான் இப்போது இளம் வானியலாளர். இவர் வானியல் பற்றி பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். பல்வேறு பள்ளிகளில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். பிரேசிலின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகத்தில் நடக்கும் கருத்தரங்கில் இவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுகிறார்.
இதோடு மட்டுமில்லாமல், நிக்கோல் அவர்கள் தனக்கென ஒரு யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில், வானியல் பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார். தனது ஒத்த வயது உடையவர்களுக்கு சிறுகோள்கள், விண்வெளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். சில சமயங்களில், ஆராய்ச்சியாளர்களையும், பேராசிரியர்களையும் சேர்ந்து தங்களது அறிவை பகிர்ந்து வருகிறார்.
இளம் வானியலாளர் வளர்ந்து வரும் நிலையில், வானியல் பற்றிய அறிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
- வானியல் இடம் முழுவதும் அமைதியாக இருக்கும். எந்த சத்தம் கேட்காது.
- இந்த சோலார் அமைப்பில், 450 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலை கொண்டதாக இருக்கும்.
- மேலும் நாசாவில் இருந்து விண்வெளி செல்வதற்கு பயன்படுத்தும் உடை 12மில்லியன் டாலர் ஆகும்.
- வானியல் மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரங்களை விட பூமியில் அதிக அளவில் மரங்கள் உள்ளது அதாவது, பூமியில் 3 டிரில்லியன் மரங்கள் உள்ளது. அதே பால்வெளி மண்டலத்தில் தோராயமாக 100 -400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளது.
- ஒரு சூரியனில், கிட்டத்தட்ட 330,000 அளவு பூமியை விட பெரியது. இது 86% அடர்வு கொண்டது.
- வான்வெளி ஒவ்வொரு முறையும் பல ஆச்சரியங்களை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது.