மடகாஸ்கர் நாட்டில் விபரீதம்... விளையாட்டு மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு...
மடகஸ்கார் நாட்டில் விளையாட்டு மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
மடகாஸ்கர் நாட்டில் இந்திய பெருங்கடல் தீவு போட்டிகள் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டின் பரியா என்ற தேசிய ஸ்டேடியத்தில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரசிகர்கள் பலர் திரண்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடினர். அவர்களில் ஏராளமானோர் பிரதான நுழை வாயிலின் வழியாக ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயன்ற நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவர். மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி, 80 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் சே உறுதிப்படுத்தி உள்ளார். தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடகாஸ்கர் நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, ஒரு நிமிடம் அமைதி காக்கும்படி கேட்டு கொண்டார் என அல் ஜசீரா தெரிவித்து உள்ளது. மடகாஸ்கர் நாட்டின் தலைநகரான அன்டனானரிவோவில் பரியா எனும் மைதானம் அமைந்துள்ளது. அங்கு நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நடைபெற்றது. இதைக் காண சுமார் ஐம்பதாயிரம் பார்வையாளர்கள் ஒன்று திரண்டிருந்தனர்.
இதனால் மைதானத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்றும், 80 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் என்றும், உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் என்ட்சே இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான முழுமையான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் படிக்க
தெலங்கானா: தலைமைச்செயலகத்தில் கோயில், சர்ச், மசூதிகளை திறந்து வைத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
தினமும் கோயிலுக்கு வந்து சென்ற மயில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு - மயிலாடுதுறையில் பக்தர்கள் சோகம்