China Earthquake: டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வுகள்.. சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது.
சீனாவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோயில் 7.2 ஆக இருந்துள்ளது. நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், அதன் அதிர்வு டெல்லி - என்சிஆர் வரை உணரப்பட்டது. நிலநடுக்கமானது நேபாளம் - சீனா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம், இந்த நிலநடுக்கத்தின் மையம் தெற்கு சீனா சின்ஜியாங்கில் கண்டறியப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் 7. 2 ஆக இருந்ததாகவும், அட்சரேகை 40.96 மற்றும் நீளம் 78.30, ஆழம் 80 கிமீ உருவாகியுள்ளது.
சீன நிலநடுக்கம்:
மேலும், சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இந்த நிலநடுக்கம் அதிகாலை 2 மணிக்கு அக்சு மாகாணத்தில் உள்ள வுஷூ கவுண்டியில் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கு பிறகு பல முறை நில அதிர்வுகள் உணரப்பட்டது. இந்த நில அதிர்வுகளில் அதிகபட்சமாக 4.5 என்ற ரிக்டர் அளவுகோலில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கிர்கிஸ்தான் - சின்ஜியாங் எல்லையில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சின் ஜியாங் ரயில்வே துறை உடனடியாக 27 ரயில்களில் சேவையை நிறுத்தியது. மேலும், தியான் ஷான் மலைத்தொடரிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Residents of the city of Almaty, in Kazakhstan, walking through the streets after the strong #7.0 earthquake that devastated Kyrgyzstan, near the border with China. #earthquake #China #Kyrgyzstan #KyrgyzstanEarthquake #ChinaEarthquake #JUSTIN #BREAKING_NEWS pic.twitter.com/kxHAj3BK6B
— Chaudhary Parvez (@ChaudharyParvez) January 23, 2024
கடந்த நூற்றாண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். ஒரு அதிகாலையில் வடக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆகும். அப்போதும் அண்டை நாடுகளான கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?
பூமிக்குள் ஏழு டெக்டோனிக் தட்டுகள் உள்ளன. இந்த தட்டுகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். அப்போது, இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று ஏறும் போது அல்லது அவற்றிலிருந்து விலகிச் செல்லும்போது, நிலம் நடுங்கத் தொடங்குகிறது. இதனையே பூகம்பம் அல்லது நிலநடுக்கம் என்று அழைக்கிறோம். நிலநடுக்கங்களை அளவிடுவதை ரிக்டர் அளவுகோல் என்று அழைக்கப்படுகிறது.
ரிக்டர் அளவுகோல் 1 முதல் 9 வரை இருக்கும். பூகம்பத்தின் தீவிரம் அதன் மையத்தில் இருந்து அளவிடப்படுகிறது, அதாவது மையப்பகுதி. அதாவது அந்த மையத்திலிருந்து வெளிவரும் ஆற்றல் இந்த அளவில் அளவிடப்படுகிறது. 1 என்றால் குறைந்த தீவிர ஆற்றல் கொண்டதாகவும், 9 என்றால் மிகவும் பயமுறுத்தும் அழிவுகரமான அலையாக பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரிக்டர் அளவுகோலில் தீவிரம் 7 ஆக இருந்தால், அதைச் சுற்றி 40 கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு வலுவான அதிர்ச்சி ஏற்படும்.
எவ்வளவு தீவிரமானது.. எவ்வளவு ஆபத்தானது?
நிலநடுக்கம் எவ்வளவு ஆபத்தானது? இது ரிக்டர் அளவுகோலில் அளவிடப்படுகிறது. நிலநடுக்கத்தில், ரிக்டர் அளவுகோலின் ஒவ்வொரு அளவும் முந்தைய அளவை விட 10 மடங்கு ஆபத்தானது.
- 0 முதல் 1.9 வரையிலான தீவிரம் கொண்ட நிலநடுக்கங்களை நில அதிர்வு வரைபடம் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.
- 2 முதல் 2.9 தீவிரம் கொண்ட நிலநடுக்கம் ஏற்படும் போது, லேசான அதிர்வு ஏற்படும்.
- 3 முதல் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் போது, ஒரு டிரக் கடந்து செல்வது போன்று தோன்றும்.
- 4 முதல் 4.9 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தில் ஜன்னல் உடைந்து விடும் அல்லது சுவர்களில் விரிசல் ஏற்படும்.
- 5 முதல் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், வீட்டுகள் குலுங்கலாம்.
- 6 முதல் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் கட்டிடங்களின் அஸ்திவாரங்களில் விரிசல் ஏற்பட்டு, மேல் தளங்கள் சேதமடையலாம்.
- 7 முதல் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் போது கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.
- 8 முதல் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், கட்டிடங்கள் மற்றும் பெரிய பாலங்கள் இடிந்து விழும்.
- 9 அல்லது அதற்கு மேற்பட்ட தீவிரம் கொண்ட நிலநடுக்கம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துகிறது. கடல் அருகில் இருந்தால் சுனாமி வரலாம்.