Earthquake in Afghanistan : மீண்டும் ஆப்கானிஸ்தானை தாக்கிய நிலநடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு !
கிட்டத்தட்ட 362,000 பேர் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் வசிக்கின்றனர். அதில் 100,000 க்கும் அதிகமான மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 5.1 என்னும் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து கிழக்கே 89 கிலோமீட்டர் தொலைவில் 112 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் “ நிலநடுக்கம்: 5.1, 11-10-2022 அன்று ஏற்பட்டது, 04:53:06 IST, லேட்: 36.91 & நீளம்: 71.53, ஆழம்: 112 கிமீ, இடம்: 89 கிமீ ESE ஃபைசாபாத், தேசிய நில அதிர்வு மையம், ஆப்கானிஸ்தான்" என குறிப்பிட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
Earthquake of Magnitude:5.1, Occurred on 11-10-2022, 04:53:06 IST, Lat: 36.91 & Long: 71.53, Depth: 112 Km ,Location: 89km ESE of Fayzabad, Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/IiUI5TNV0j@ndmaindia @Indiametdept pic.twitter.com/eED5BYvOG5
— National Center for Seismology (@NCS_Earthquake) October 10, 2022
முன்னதாக கடந்த ஜூன் 22 அன்று தென்கிழக்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய நிலடுக்கம் அதன் அருகில் உள்ல பாக்டிகா, பாக்த்யா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது.இதேபோல ஜூன் 22 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட மைய பகுதியில் இருந்து , 3 கிமீ தொலைவில் உள்ள ஸ்பெரா மாவட்டத்தில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜூலை 18 ஆம் தேதி ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.
Coordination of Humanitarian Affairs (OCHA) அறிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட 362,000 பேர் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் வசிக்கின்றனர். அதில் 100,000 க்கும் அதிகமான மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழக்க , 1500 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க , வீடுகள், சுகாதார வசதிகள், பள்ளிகள் , வீடுகள் மற்றும் நீர் மேலாண்மை வசதிகள் நிலநடுக்கத்தால் பாதிப்பானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாக்டிகா மற்றும் கோஸ்ட் போன்ற அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் முதல் மூன்று மாத நிலையை சரி செய்யவே 110.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவசர தேவை இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஜூன் 22 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.