மேலும் அறிய

தன்பால் ஈர்ப்பை சட்டபூர்வமாக்கியது சிங்கப்பூர்: பிரதமர் லீ லூங் அறிவிப்பு

தன்பால் ஈர்ப்பை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் ரத்து செய்து, அந்த நாட்டில் தன்பால் ஈர்ப்பை தற்போது சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

தன்பால் ஈர்ப்பை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் ரத்து செய்து, அந்த நாட்டில் தன்பால் ஈர்ப்பை தற்போது சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

தேசிய தொலைக்காட்சியில் பிரதமர் லீ சியென் லூங் அறிவித்த இந்த முடிவு பல ஆண்டுகளாக கடுமையான விவாதத்திற்குப் பிறகு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் உள்ள LGBT ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை "மனிதகுலத்திற்கான வெற்றி" என்று பாராட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் அதன் பழமைவாத மதிப்புகளுக்கு பெயர் போனது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வரும் மக்கள், காலனித்துவ கால 377A சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து வந்தனர்.

இதன்மூலம் இந்தியா, தைவான் மற்றும் தாய்லாந்திற்குப் பிறகு, ஆசியாவிலேயே எல்ஜிபிடி உரிமைகளை சட்டபூர்வமானதாக்கிய சமீபத்திய அரசு சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டின்படி 377A சட்டம் ஆண்களுக்கிடையிலான பாலுறவைத் தடைசெய்தது. இதன்மீதான தொடர் விவாதங்களுக்கு பதில் அளித்த சிங்கப்பூர் அரசு இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் முயற்சியில் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தது.

View this post on Instagram
 
A post shared by DW News (@dwnews)

ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரதமர் லீ "இதுதான் சரியான செயல், மேலும் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என்று தான் நம்புவதால், 377A சட்டத்தை ரத்து செய்வதாகக் கூறினார்.

"தன்பால் ஈர்ப்பாளர்கள் இப்போது சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்" என்றும், 377A ஐ நீக்குவது நாட்டின் சட்டங்களை "தற்போதைய சமூக விதிகளுக்கு ஏற்ப கொண்டு வரும் என்றும்,  சிங்கப்பூரைச் சேர்ந்த தன்பால் ஈர்ப்பாலர்களுக்கு இது ஓரளவு நிவாரணம் அளிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இறுதியாக நாங்கள் அதைச் செய்தோம், இந்த பாரபட்சமான, பழங்காலச் சட்டம் இறுதியாக புத்தகத்திலிருந்து வெளியேறப் போகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது நிறைவேற்றப்பட சிறிது நேரம் எடுத்திருக்கலாம், ஆனால் என்றேனும் ஒரு நாள் இது நடக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று ஓரினச்சேர்க்கை ஆர்வலர் ஜான்சன் ஓங்  கூறினார்.

எல்ஜிபிடி உரிமைக் குழுக்களின் கூட்டணி இதை "கடினமாக வென்ற வெற்றி மற்றும் பயத்தின் மீதான போரின் இறுதியில் அன்பின் வெற்றி" என்று அழைத்தது, இது முழு சமத்துவத்திற்கான முதல் படியாகும்.

ஆனால் அதே உரையில் பிரதமர் லீ வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் என்ற வரையறைக்கு சிறந்த சட்டப் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யும் என்று அவர் கூறியிருந்தார். இது ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதை கடினமாக்கும்.

சிங்கப்பூர் குடும்பம் மற்றும் சமூக நெறிமுறைகளைப் பராமரிப்பதில் ஆர்வமுள்ள ஒரு பாரம்பரிய சமுதாயமாகவே உள்ளது என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். 

LGBT ஆர்வலர்கள் இதை பெருத்த ஏமாற்றமாகக் கருதுகின்றனர். மேலும் இது சமூகத்தில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
"பெங்களூரு டிராபிக்.. கடவுளே வந்தாலும் பிரச்னையை தீர்க்க முடியாது" டி.கே. சிவகுமார் தடாலடி!
Embed widget