Air pollution: தாய்லாந்தில் உருவான காற்று மாசுபாடு - 2,00,000 பேர் மருத்துவமனையில் அனுமதி: வெளியான முக்கிய அறிவிப்பு
தாய்லாந்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக கிட்டத்தட்ட 2,00,000 மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
![Air pollution: தாய்லாந்தில் உருவான காற்று மாசுபாடு - 2,00,000 பேர் மருத்துவமனையில் அனுமதி: வெளியான முக்கிய அறிவிப்பு 2,00,000 people have been hospitalized due to air pollution in Thailand Air pollution: தாய்லாந்தில் உருவான காற்று மாசுபாடு - 2,00,000 பேர் மருத்துவமனையில் அனுமதி: வெளியான முக்கிய அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/51f567db555de5ca1616e586dad975311678824947334571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காகில் வாகனத்தினால் ஏற்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் விவசாய பொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து, அந்நாடு முழுவதையும் பாதிப்புக்குள் உள்ளாகியது.
13 லட்சம் மக்கள் பாதிப்பு
அதிகரித்து வரும் மாசுபாட்டின் காரணமாக அந்நாட்டில் சுமார் 13 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளானதாக தாய்லாந்தின் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாங்காங்கில் உள்ள சுமார் 50 மாவட்டங்களில் PM 2.5 துகள்களின் பாதுகாப்பற்ற அளவுகள் பதிவாகியுள்ளன. அத்துகள்கள் மனித இரத்த ஓட்டத்தில் நுழைந்து உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் அபாயம் கொண்டிருப்பதால் அவை ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
"வீட்டிலிருந்தே பணிபுரிய மக்களை ஊக்குவிப்பதால் மாசுபாட்டின் தீவிரத்தை கட்டுப்படுத்த இயலும்”. மேலும் பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அவசியத்தை தவிர வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்று அந்நாட்டின் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)