(Source: ECI/ABP News/ABP Majha)
Afghanistan Blast: ஆப்கனில் குண்டு வெடிப்பு: 16 பேர் பலி; 24 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் அய்பக் நகரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் அய்பக் நகரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்வது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Bomb explosion in a religious madrasa in Samangan killed around 23 and wounded more than 30 people. Incident happened during the Dhuhar prayer. Local health officials confirmed that explosion have many casualties. #Afghanistan #Afghan pic.twitter.com/ey0xFthoCk
— Kabir Haqmal (@Haqmal) November 30, 2022
2018- ஆம் ஆண்டு 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்களின் படை பலத்தினால், அமெரிக்க தங்களது படைகளையும், பணத்தையும் மேலும் இழக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, பிப்ரவரி, 29, 2020-இல் தலிபான்களுடன் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் அமெரிக்கா திரும்ப பெற்றது.
இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. ஓராண்டுகளாக துயரத்தின் பிடியில் ஆப்கன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை, மறுபுறம் தலிபான்களின் கடுமையான விதிகள். இதற்கு மத்தியில் ஆப்கன் மக்களின் வாழ்வு போராட்டமாக மாறிவிட்டது. மேலும், அங்கு வாழும் பெண்கள் கார் ஓட்ட அனுமதில் மறுக்கப்பட்டது, பொதுவெளியில் பெண்கள் தங்கள் முகம் தெரியும்படி செல்லக் கூடாது என்பது போன்ற பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது தலிபான் அரசு.
ஆப்கானிஸ்தானில் மாணவிகள் கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்கு செல்ல தலிபான் அரசு தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபுலில் இருந்து மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர். இதில் மாணவர்களுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு சென்று படிப்பதற்கு ஆப்கனில் உள்ள மாணவிகளுக்கு அனுதிக்க அளிக்கப்படாது என்பதே தலிபானின் முடிவு என்று செய்திகள் வெளியாகியிருந்தது.