அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு! மதுபான விடுதியில் 14 பேர் கொலை...என்ன காரணம்?
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகில் உள்ள சோவெட்டோ டவுன்ஷிப்பில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகில் உள்ள சோவெட்டோ டவுன்ஷிப்பில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதை காவல்துறை உறுதி செய்துள்ளனர்.
BREAKING: South Africa police say a shooting at a tavern in Johannesburg’s Soweto township has killed 14 people and left three others in critical condition. https://t.co/zbi4849KhU
— AP Africa (@AP_Africa) July 10, 2022
சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து விவரித்த காவல்துறை துணை அலுவலர் எலியாஸ் மாவெல, "அதிகாலை 12:30 மணியளவில் நாங்கள் அழைக்கப்பட்டோம். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இருவர் பின்னர் இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. தலைநகரின் தென்மேற்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் மதுபான விடுதி அமைந்துள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட வடுவே தீராத நிலையில், ஜூலை 4ஆம் தேதி அமெரிக்க சுதந்தர தினத்தன்று பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 220 பேர் கொல்லப்பட்டனர். 570 பேர் படுகாயம் அடைந்தனர்.
15 Killed In Bar Shooting Near South Africa's Johannesburg: Police https://t.co/doCLTL2efi pic.twitter.com/hnunRsbUfI
— NDTV (@ndtv) July 10, 2022
இதற்கிடையே, ஜப்பானில் பிரசார கூட்டத்தில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அபே சுட்டு கொல்லப்பட்டார். இம்மாதிரியான துப்பாக்கிச்சூடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெரும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்