மேலும் அறிய

உலக சிட்டுக்குருவி தினம்: 400 கிலோ தானியங்களில் சிட்டுக்குருவி ஓவியத்தை வரைந்த கல்லூரி மாணவர்

World Sparrow Day 2022: அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவியை பாதுகாக்க வலியுறுத்தி 400 கிலோ தானியங்களை கொண்டு சிட்டுக்குருவி ஓவியத்தை கல்லூரி மாணவர் வரைந்துள்ளார்.

புதுச்சேரியில் 32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களைக் கொண்டு சிட்டுக்குருவியின் பிரமாண்ட உருவப்படத்தை உருவாக்கி பொறியியல் மாணவர் ஒருவர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார் குப்பம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (18). இவர் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசிஇ முதலாமாண்டு படித்து வருகிறார்.

ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், (மார்ச் 20) உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுதும் வகையில், புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் சேதிலால் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் 32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களை கொண்டு 125 அடி அகலம், 260 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான சிட்டுக்குருவியின் உருவப்படத்தை உருவாக்கி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

உலக சிட்டுக்குருவி தினம்: 400 கிலோ தானியங்களில் சிட்டுக்குருவி ஓவியத்தை வரைந்த கல்லூரி மாணவர்

இதனை நேற்று காலை தொடங்கி மாலையில் செய்து முடித்தார். முதலில் சிட்டுக் குருவியின் உருவப்படத்தை வரைந்து, பின்னர் அவற்றில் அரிசி, கோதுமை, உளுந்து, பச்சைப்பயறு ஆகிய தானியங்களைத் தூவி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். மாணவரின் இந்த முயற்சியை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து, உலக சாதனை சான்றிதழ் வழங்கயிருக்கிறது. மாணவரின் இந்த சாதனை முயற்சிக்கான ஏற்பாடுகளை விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை தலைவர் பிரேம்குமார் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

உலக சிட்டுக்குருவி தினம்: 400 கிலோ தானியங்களில் சிட்டுக்குருவி ஓவியத்தை வரைந்த கல்லூரி மாணவர்

இது குறித்து மாணவர் வினோத் கூறியதாவது :- “சிட்டுக்குருவிகள் கூடு இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவு சிட்டுக்குருவிகள் இருந்தன. இப்போது சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருகிறது. தற்போது இந்த பறவைகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டேன். சிட்டுக் குருவிக்கு உணவளிப்பதோடு, அதனை பாதுகாக்க வேண்டும். பறவைகள் இருந்தால் இயற்கை இருக்கும். இயற்கை இருந்தால் மனித இனமும் செழிப்படையும். ஆகவே, பறவை இனங்களை பாதுகாக்க ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்” என்றார். மாணவரின் இந்த விழிப்புணர்வு சாதனை முயற்சி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!

Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..

TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!

ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!

Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை

Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?

Embed widget