மேலும் அறிய
Advertisement
மூன்றாவதும் பெண் குழந்தை; கருகலைப்பு செய்த பெண் உயிரிழப்பு - கடலூரில் சோகம்
பாலினம் கண்டறிவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரின் மனைவி அமுதா இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் அமுதா மீண்டும் கருவுற்று நான்கு மாதங்கள் ஆன நிலையில் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்ள ஆசைப்பட்ட அமுதா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என தெரிந்து கொண்ட அமுதா அந்த கருவை கலைக்க முடிவு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூர் தனியார் மருந்தகத்தில் கரு கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 17 ஆம் தேதி கருக்கலைப்பு செய்து கொண்ட அமுதாவிற்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அமுதா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மே மாதம் ஏழாம் தேதி கடலூர் மாவட்டம் ராமநத்ததை சேர்த்த அனிதா என்ற பெண் பெரம்பலூரில் கருக்கலைப்பு செய்து கொண்டதால் உயிரிழந்தார். இது சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை திட்டக்குடி, வேப்பூர், பகுதியில் கருக்கலைப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக எழுத புகாரின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது. ஆய்வு நடந்து கொண்டிருந்தபோது சத்யா என்ற பெண் கரு கலைப்பு செய்ய முயற்சித்த போது மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஏழு மாதத்திற்குள் கடலூர் மாவட்டத்தில் கருக்கலைப்பு செய்து கொண்டதால் மேலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் கூட பெண் குழந்தைகளை பாரமாக நினைக்கும் பெற்றோர்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் இது போன்ற கருக்கலைப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது என்பதால் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கருக்கலைப்பு நடைபெறுகிறது. பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு பாலினம் கண்டறிதல், கருக்கலைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்ட விரோதமாகவும், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் மருந்தகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதிக கிராமப்புறங்கள் மற்றும் அறியாமையில் உள்ள மக்களுக்கு பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தமிழக அரசு சிறப்பு சட்டத்தினை ஏற்படுத்தித் தர வேண்டும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion