தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவர் - விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றின் தரைப்பாலத்தினை இருசக்கர வாகனத்தில் கடக்கமுயன்ற இருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் இருவரையும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
திருவெண்ணைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் தரைப்பாலத்தினை இருசக்கர வாகனத்தில் கடக்கமுயன்ற இருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் இருவரையும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுய் வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள உள்ள அருளவாடி கொங்கராயநல்லூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(38), அத்தியூர் திருக்கை கிராமத்தை சேர்ந்த ரகு(30) மற்றும் காத்தவராயன்(32) ஆகியோர் கொங்கராயநல்லூர் கிராமத்தில் கட்டிட வேலை செய்துவிட்டு நேற்று இரவு இரண்டு இரு சக்கர வாகனங்களில் தரைப்பாலத்தை கடந்துள்ளனர். அப்போது தண்ணீரின் வேகம் காரணமாக மூன்று பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் கார்த்திகேயனை அப்பகுதியில் சென்றவர்கள் மீட்ட நிலையில் காத்தவராயன் மற்றும் ரகு இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர் இரவு நேரம் என்பதால் நேற்று இரவு தேடுதல் பணியை தொடங்க முடியாத நிலையில் இன்று காலை முதல் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதாலும் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தரைப்பாளத்தில் சென்ற தண்ணீரில் இருவர் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி பாதை மூடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.