"காதல் திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை" - வீடியோ வெளியிட்டு இளைஞர் செய்த காரியம்
காதல் திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதாலும் குடும்ப கஷ்டத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை.
விழுப்புரம்: சிறுவந்தாடு அருகேயுள்ள மோட்சகுளம் கிராமத்தில் காதல் திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதாலும் குடும்ப கஷ்டத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகேயுள்ள மோட்சகுளம் கிராமத்தில் சங்கர் கணேஷ் என்ற இளைஞர் கோமலா என்ற பெண்னை காதலித்து கடந்த ஒரு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். காதல் மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாலும் குடும்ப கஷ்டத்தினாலும் சங்கர் கணேஷ் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீடான உறுவையாறு பகுதிக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து வீட்டிலையே இருந்த சங்கர் கணேஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன் குடும்ப கஷ்டத்தினாலும், காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எல்லோருக்கும் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கும் வாழ்க்கையே கஷ்டமாக இருப்பதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர். காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என கூறி இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதவி மையம்
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)