மேலும் அறிய

ஊராட்சி மன்ற தலைவர் மோசடி செய்கிறார்..? - விழுப்புரம் ஆட்சிரிடம் வார்டு உறுப்பினர்கள் புகார்

விழுப்புரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ஊராட்சி தலைவர் மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சமாதேவி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் பஞ்சமாதேவி ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த செல்வம் என்பவர் இருந்து வருவதாகவும் அவர் வார்டு உறுப்பினர்களின் அனுமதியின்றி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தீர்மானங்களை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

போலி கையழுத்து 

மேலும், கிராமப் பகுதிகளில் அமைக்கப்படும் மனை பிரிவுகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் மற்றும் மக்கள் நல பணிகளில் வார்டு உறுப்பினர்களின் கையெழுத்தை போலியாக ஊராட்சி மன்ற தலைவர் அவரே கையொப்பமிட்டு லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். மேலும் அலுவலகம் மற்றும் வங்கிகளில் வார்டு உறுப்பினர்களின் கையெழுத்தை போலியாக போட்டு பல்வேறு முறைகேடுகள் மூலம் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார். இதுகுறித்து பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் அவருக்கு அனைத்து துறை அதிகாரிகளும் துணை போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பண மோசடி

மேலும், உறுப்பினர்களின் கையெழுத்துகளை ஊராட்சி மன்ற தலைவர் போலியாக போட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது குறித்து வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மக்களின் அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் விற்கப்படும் மனைப்பிரிவுகளை பதிவு செய்யாமல் இருக்க பத்திர பதிவு துறையிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை என கூறியுள்ள உறுப்பினர்கள், முறைகேடுகள் குறித்து கேட்டாலோ, புகார் அளித்தாலோ திமுக ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், வார்டு  உறுப்பினர்களை மிரட்டுவதாகவும் அதற்கு அதிகாரிகளும் காவல்துறையும் துணைபோவதாக குற்றம் சாட்டிய வார்டு உறுப்பினர்கள் தலைவரின் மோசடி குறித்து ஆட்சியர் விசாரணை மேற்க்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget